Skip to main content

Posts

Showing posts with the label பாரதிதாசன்

இந்தச் சரக்கொன்றை மலர்களுக்கு முன்னால்

  இந்தக் கோடையில் மட்டும் அல்ல; எந்தக் கோடைக்கும் மாபெரும் அணிகலனாகவும் வீண் ஆடம்பரமாகவும் என்னை உறுத்துவது இந்தச் சரக்கொன்றை மரங்கள் தான். உலர்ந்து மக்கும் வேம்பிலைகள், பன்னீர் பூக்களின் வாசனை வழியாக எனது புலன்கள்தான், முதலில் தெரிந்துகொண்டு சென்னைக்குள் கோடையை வரவேற்கிறது என்பது எனது எண்ணம். கடந்த பத்தாண்டுகளாகத் தான் சென்னை வெயிலை மஞ்சள் பொன்னாக்கித் தன் தலையில் சூடிக்கொண்டிருக்கும் சரக்கொன்றைப் பூக்களின் மலர்வையும் உதிர்வையும் கவனத்தோடு பார்க்கிறேன். புகைப்படக் கலைஞரும் ஒளிப்பதிவாளருமான அல்போன்ஸ் ராயை ஒரு நேர்காணலுக்காக சந்தித்தபோது, அவர் வீடு இருக்கும் தெருவுக்கே லேபர்னம் அவன்யு என்று பெயர் வைத்திருப்பதைக் குறிப்பிட்டார். சென்னையின் கோடைக் காலம் அதற்கேயுரிய வசீகரங்கள், மகிழ்ச்சிகள், உஷ்ணம் சார்ந்த அல்லல்கள், நினைவுகளைக் கொண்டதாக இருப்பினும் அவற்றுக்கு மத்தியில் வருடம்தோறும் என் காட்சிக்குள் அடர்ந்துவரும் இந்த சரக்கொன்றை பூக்கள் கொண்டிருக்கும், மொழியால் விண்டு விவரித்துவிட முடியாத அழகு என்னைக் கோபம் கொள்ளவே செய்கிறது; பெயருக்கு ஏற்ப சரம் சரமாய், மரமே மலர்களான நாங்கள் தான் என்று...

பாரதிதாசனின் ‘நீரற்ற ஆற்றுப்பாதை’, கலாப்ரியாவின் நீர் வரப்போகும் குளம்

அழகின் சிரிப்பில் ‘கடல்’ பற்றிய பகுதியில் கடல் மணல், நண்டுகள் என ஓரத்தில் நடைபயிலத் தொடங்கி கடலின் ஆழத்து அமைதிக்குச் செல்கிறார். ஓரக்கரையில் கலகங்கள் விளைவிக்கும் அலைகள், தூரத்தில் ஆழக்கடலில் இல்லை என்று குறிப்பிடும் அவர் அதை ‘புரட்சிக்கப்பால் அமைதி’ என்ற தலைப்பில் குறிப்பிடுகிறார். ‘அருகுள்ள அலைகட் கப்பால்/ கடலிடை அமைதி அன்றோ’ என்று உரைக்கும்போது ‘அமைதி’, அமைதி தோன்றிவிடுகிறது. கடலிடை அமைதி என்ற வெளிப்பாடு படித்ததிலிருந்து மோதிக்கொண்டிருக்கிறது; எண்ணங்களுக்கிடையில் உள்ள இடைவெளி போல.  கடலைத் தாண்டி, தென்றலைத் தாண்டி, காட்டைத் தாண்டி குன்றமும் தாண்டி ஆற்றுக்கு வருகிறார் பாரதிதாசன். ஆறு முதலிலேயே நீர் தளும்பி ஓடும் ஆறல்ல. முதல் கவிதை ‘நீரற்ற ஆறு’. செல்லும் வழி இருட்டு என்று புதுமைப்பித்தன் வழி வந்த இந்த நவீன கவிஞனுக்கு, ஆற்றில் நீர் இல்லாத போதிருக்கும் வெறுமைதான் உடனே அடையாளம் காணக்கூடியதாகவும் இருக்கிறது. அடுத்து வரும் வழிப்போக்கும் எனக்கு நெருக்கமானது.  நீரற்ற ஆற்றுப்பாதை இருபக்கம் மண்மே டிட்டும், இடைஆழ்ந்தும், நீள மான ஒருபாதை கண்டேன், அந்தப் பாதையின் உள்இ டத்தில் உரித்தநற் ற...

பாரதிதாசனுடைய ‘குரங்கின் அச்சம்’

பாரதிதாசனின் ‘அழகின் சிரிப்பு’-ஐ தற்செயலாக நேற்றிரவு வாசிக்கத் தொடங்கியபோது, கவிஞனின் சிரிப்பை ஆங்காங்கே பார்த்து அனுபவித்தேன். யாப்பிலக்கணத்தின் தளை, மரபான மனத்திலிருந்து விடுபடாத சுமை, கொண்ட கருத்தை ஊடகத்துக்குள் செலுத்தும் மிகுகவனம் எல்லாம் பாரதிதாசனிடம் இருக்கிறது. ஆனால், தானும் சேர்ந்த இயற்கையில் ஈடுபடும்போது தனது அனுபவத்தைப் புதிதாகப் பார்க்கும் வியப்பும் விந்தையும் சேர அதை மொழிக்காட்சியாக ஆக்கத் துடிக்கும் வெள்ளந்தித் தன்மை கொண்ட கவிஞன் கணிசமாக ‘அழகின் சிரிப்பு’-ல் தென்படுகிறான்.  ‘இறகினில் உயிரை வைத்தாய்/ எழுந்தன புட்கள்!’ என்று கூறும்போது பறவைகள் ஒரு பசிய வயலிலிருந்து, நிலப்பரப்பிலிருந்து எழும் காட்சி உதயமாகிவிடுகிறது. இயற்கையை தாய்மையின் கருணையாக, இயற்கையை நெறிப்படுத்தப்பட வேண்டிய குழப்படியாக, இயற்கையின் ஒரு பகுதியை விஷமமாக, இயற்கையைத் தீங்காகப் பார்த்த நவீனப் பார்வை பாரதிதாசனிடம் இல்லை. ஆனால் பாலியல் ஒழுக்கம்  சார்ந்து பாரதிதாசனிடம் பழைய அதே தமிழ் ஆள்தான் இருக்கிறான். புறாவைப் பற்றி எழுதும்போது பெண் புறா, ஒரு ஆண் இணையையே பராமரிக்கும் என்று சிறப்பித்துக் கூறுகிறார். ...