புராதனம், புராணிகம், வரலாற்றின் இடிபாடுகளுக்குள், சமகால வாழ்வின் இடிபாடுகளை ஒளித்துவைத்து எழுதும் தொனியையும் உள்ளடக்கத்தையும் கொண்ட கண்டராதித்தன், செவ்வியல் குணத்திலிருந்து எதார்த்தத்தை நோக்கி ‘பாடிகூடாரம்’ கவிதைத் தொகுதியில் மிக மெதுவாக நகர்ந்திருக்கிறார். பாடிகூடாரத்தில் உள்ள கவிதைகளில் சுயசரிதையெனத் தோன்று அந்தரங்க மொழிகொண்டு அன்றாட உலகத்துக்கு அவர் கவிதைகள் தரையிரங்கியிருக்கின்றன. கலாப்ரியாவின் சாயலையும் நகுலனின் சாயலையும் முந்தைய கவிதைத் தொகுதிகளில் மிகச் சன்னமாக உணர முடிந்திருக்கிறது. இத்தொகுதியில் உள்ள கண்டராதித்தனின் ‘தாழ்வாரம்’ கவிதையில் உள்ள சித்திரத்தன்மை கலாப்ரியாவை வெளிப்படையாகவே ஞாபகப்படுத்தியது. தாழ்வாரம் கவிதையைப் படிக்கும்போது திண்ணையுள்ள பழைய ஓட்டுவீடு தோற்றம் கொள்கிறது. தாழ்வாரத்தை நோக்கிப் பணிந்து வாழத்தெரியவில்லை என்று கவிதை சொல்லி சொன்னாலும், ‘பாடிகூடாரம்’ தொகுதி கவிதைகளில் மொழி, அந்தரங்கத்தை நோக்கியும் அன்றாடத்தை நோக்கியும் சன்னம் கொண்டிருக்கிறது. தாழ்வாரம் பணியிலிருந்து எப்போது வீடு திரும்பினாலும் நீங்கள் துக்கமாக இருப்பதாக பிள்ளைகள் புகார் சொல்கிறார்கள் எவ