சிறந்த சிறுகதைகளையும் சிறுகதைக் கலைஞர்களையும் கொண்ட தமிழ் மொழியில் அந்தச் சாதனை குறித்த பிரக்ஞையும் அது ஏற்படுத்திய வரம்புகளை நகர்த்திப் பார்க்கும் திடமும் அந்தத் திடம் அளித்த நிறைவான வெற்றிகளும் விஷால் ராஜாவின் ‘திருவருட்செல்வி’ சிறுகதைகள். சிறுகதையோ, கவிதையோ, நாவலோ தமிழில் வந்து சேர்ந்திருக்கும் இடம், அது கடந்த சாதனைகள், அது உடைத்த வரம்புகள் பற்றிய பிரக்ஞை இல்லாமலேயே வெறும் தொழில்நுட்பமாக,வெறும் அலங்காரமாக, வெறும் பகட்டாக, வெறும் கலையாக, படைப்புகள் வார்த்தெடுக்கப்படுகின்றன. தங்கள் வடிவத்தில் குறிப்பிடத்தகுந்த சாதனைகளைச் செய்த மூத்த எழுத்துக் கலைஞர்களே, தங்கள் சாதனைகளே நகைக்கும்படியாக, உள்ளடக்கத்திலும் பார்வையிலும், நவீன தமிழ் இலக்கியம் வெகுகாலத்துக்கு முன்னர் கடந்த அரதப்பழசான இடங்களை நோக்கி வேகமாகச் செல்கின்றன. இன்றைய சிறுபத்திரிகை மொழியில் மறுபடைப்பு செய்யப்பட்ட பல இளம்படைப்பாளிகளின் கதைகளுக்குள் பழைய விகடன், மாலைமதி, அமுதசுரபி இதழ்களில் வந்த கதைகள் ஒளிந்திருக்கின்றன. அந்தக் கதைகளை நியாயப்படுத்துவதற்கு நமக்கு அமைப்பியல், பின் அமைப்பியல், பின் நவீனத்துவ விமர்சனக் கருவிகளும் உதவிகரமா