ஷங்கர் 20 ஆம் நூற்றாண்டு, உலகளவில் பல மாற்றங்களையும், உடைப்புகளையும் கண்ட நூற்றாண்டாகும். அடிமைப்பட்ட தேசங்கள் சுதந்திரக் காற்றைச் சுவாசித்தது ம், சிந்தனை மற்றும் கலைகள் ஜனநாயகப்படுத்தப்பட்டு, மரபின் தடைகள் உடைந்து நவீனத்துவம் கொண்டதும் இக்காலகட்டத்தில்தான். செய்யுளாக இருந்த கவிதை வடிவம், நவீன கவிதையாகியது. நவீன ஓவியமாக மாற்றம் கொண்டது. அந்தப் பின்னணியில் இந்தியாவில் மரபாக இருந்த நடனவடிவை அதன் பழைய அலங்காரங்களைக் களைந்து நவீன வடிவமாக்கியவர் சந்திரலேகா. இவர் நடனம் என்ற வடிவத்தோடு தன்னைச் சுருக்கிக் கொள்ளவில்லை. இந்தியாவில் உருவான பெண்ணிய இயக்கத்துக்கு முக்கிய தூண்டுவிசையாக இருந்தவர். நெருக்கடி நிலை காலகட்டத்தில்,கருத்து சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல் உருவான நிலையில் அரசுக்கு எதிராகக் குரல் எழுப்பியவர். போஸ்டர் வடிவமைப்பாளர், ஓவியர் மற்றும் கவிஞர். இந்திய வாழ்க்கை முறை மற்றும் கலைமரபின் நல்ல அம்சங்களைப் புறக்கணிக்காமலேயே தனது கலையை நவீனப்படுத்திய முக்கியமான ஆளுமை சந்திரலேகா. 1928 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், மகாராஷ்டிர மாநிலமான வாடாவில் செல்வச்செழிப்புள்ள குடும்ப