Skip to main content

Posts

Showing posts from November, 2015

மரத்தின் உச்சியில் ஏறிய பாம்பு

                                                                    ஷங்கர்ராமசுப்ரமணியன் எங்கள் வீட்டுத் தென்னை மரத்தின் மேல் ஒரு பாம்பு ஏறியுள்ளது அது சாரைப்பாம்பென்றார்கள் கடந்துபோகிறவர்கள் சிலர் கொம்பேறி மூக்கன் என்றனர் சென்னையின்  மழை ஈர நசநசப்பால் எரிச்சல்பட்டு  சற்று வெயிலேறியவுடன் தென்னையில் ஏறியிருக்கலாம் தலை சற்று சிறுத்து உடல் தடித்த நீளமான பாம்பு அது சற்று நேரம் பன்னாடையில் சுருண்டு இளைப்பாறுகிறது சற்று நேரம் கழித்து தென்னை இலைகளில் நீண்டு நெளிந்து சுற்றிப் தன் பராக்கிரமம் காட்டுகிறது தெருவில் நின்று வேடிக்கை பார்க்கும் என்னை தலையை மடக்கிக் கூர்மையாகப் பார்த்து உன்னை யுகம்தோறும் தொடர்வேன் என்பதாகப் பயமுறுத்துகிறது வழக்கமாகத் தென்னைக்கு வரும் அணில் தனக்குப் பழக்கமான இடத்தில் இன்னொருவர் இருப்பதைப் பார்த்து வாலைத் தூக்கி திரும்பத் திரும்ப நெருங்கி கீச்சிடுகிறது பாம்பு பதுங்கியிருக்...

சிறிய பொருட்களே சின்னஞ்சிறிய பொருட்களே

                                            ஷங்கர்ராமசுப்ரமணியன்   நேசத்துக்குரியவர்களும்  அத்தியாவசியமானவைகளும்  இல்லாமலாகும்  வயதில்  இடத்தில்  சிறிய மதிப்பற்ற  பொருட்கள்  மூடநம்பிக்கைகளாய்  வந்து ஒட்டிக்கொள்கின்றன  புதிய நகவெட்டி  ஒரு காதலின் பருவத்தில் சேகரித்த  பறவையின் இறகுகள் துங்கபத்ரை நதியின் பாறை இடுக்குகளில் பொறுக்கிய கூழாங்கற்கள் வளர்ந்த மகளின் சின்ன உடைகள் இறந்துபோன வளர்ப்புமீன்களுக்கு வாங்கிய உணவுப் புட்டி பழைய அடையாள அட்டையிலிருந்த புகைப்படம் நண்பரின் கையெழுத்தைக் கொண்ட புத்தகம் அனைத்தும் தொலைந்தவற்றின்  நினைவைப்  பதுக்கிவைத்திருக்கின்றன ஒருபோதும் என்னால் விட்டுச் செல்ல இயலாத சிறிய பொருட்களே சின்னஞ்சிறிய பொருட்களே