காவல் மரணங்கள், மோதல் சாவுகள், வரதட்சணைக் கொலைகள், பாலியல் குற்ற மரணங்கள், பள்ளிகள் மற்றும் பணியிட மரணங்களுக்குப் பின்னால் உள்ள எத்தனையோ புதிர்களைத் தீர்க்கக்கூடிய இடம் பிரேதப் பரிசோதனை அறை. பெருநகர அரசு மருத்துவமனைகளில் நடக்கும் பிரேதப் பரிசோதனைகளே பத்தோடு பதினொன்றாக செய்யப்படும் நிலையில் கிராம மருத்துவமனைகளில் ஒரு சந்தேகத்துக்குரிய மரணம் எப்படி தீர்க்கப்படும்? ஒரு கிராமத்தில் நிகழும் மரணத்துக்குப் பின்னால் உள்ள சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ளும் உரிமை இங்கே மறுக்கப்படுகிறது என்கிறார் சட்டம் சார்ந்த சிறப்பு மருத்துவர் டிகால். வேலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை,கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் பணிபுரிந்துள்ளார். தற்போது தனியார் மருத்துவக் கல்லூரி ஒன்றியில் இணைத் தடயவயில் மருத்துவப் பேராசிரியராகப் பணிபுரிகிறார். இதுவரை 2000 சட்டம்சார்ந்த பிரேதப் பரிசோதனைகளைச் செய்துள்ளார். குற்றவியல் வழக்குகளில் நிபுணர் சாட்சியாக பங்கேற்று பல்வேறு வழக்குகளில் தீர்வுகளை அளிப்பவராகவும் இருக்கிறார். 2 ஜி வழக்கில் சர்ச்சைக்குரிய முறையில் தற்கொலை செய்துகொண்டதாகக் கருதப