Skip to main content

Posts

Showing posts from March, 2016

புகைப்படங்கள் நம் ஆயுளைக் குறைக்கும்

        ஷங்கர்ராமசுப்ரமணியன் இந்தியர்கள் , வரலாற்றையும் வரலாற்று நிகழ்வுகளையும் பண்பாட்டையும் அந்தந்தக் காலத்திய பொருள்சார் கலாசாரத்தையும் , ஆவணப்படுத்துவதில் ஈடுபாடில்லாதவர்கள் என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து சொல்லப்பட்டு வருகிறது. அந்தக் குற்றச்சாட்டில் பெரும்பகுதி , நமது நவீன காலப் பார்வையில் உண்மையாக இருப்பினும் , எல்லாவற்றையும் ஆவணப்படுத்தி என்ன ஆகப்போகிறது என்ற விட்டேத்தியாக இருந்த நம் முன்னோர்களின் விவேக ஞானத்தையும் நாம் இப்போது பரிசீலித்தே ஆகவேண்டும். பிறப்பு முதல் மரணம் வரை ‘ செல்ஃபி ’ எடுக்கப்படும் காலகட்டத்தில் இருக்கிறோம். புகைப்படக் கருவிக்கு முன்னால் அரிதாக நின்றால்கூட ஆயுள் குறைந்துவிடும் என்று ஒரு நம்பிக்கை நம்மிடையே சில பத்தாண்டுகள் முன்புவரை நிலவியது. அது இப்போதைய தலைமுறையினருக்கு வினோதமாகப்படலாம். தோன்றியது எல்லாவற்றையும் சொல்லவோ எழுதவோ வேண்டியதில்லை ; தோன்றுவது எல்லாவற்றையும் படம்பிடிக்க வேண்டியதில்லை ; செய்வதெல்லாவற்றையும் பதியவோ ஆவணப்படுத்தவோ வேண்டியதில்லை ; ஒரு காலத்தில் நமக்கு இப்படியான ஒரு விவேகம் இருந்திருக்கிறது. இந்த நடைமுறை விவேகத்தின் வெளிப்பாடா