Skip to main content

Posts

Showing posts with the label மா. அரங்கநாதன்

இரண்டு முத்துக்கருப்பன்கள் சந்திக்கிறார்கள்

அன்றாடப் புழக்கத்தில் உள்ள பேச்சு மொழியை, ஆழ்ந்த த்வனி கொண்ட தனி இலக்கிய அனுபவமாக மா. அரங்கநாதன் சகஜமாக தனது கதைகளில் மாற்றிவிடுகிறார். ‘அவனது பக்கத்திருக்கையில் இருந்த கிழவர் பேசுவதற்கு நாயாய் அலைந்தார்’ என்ற வரியைக் கடக்கும்போது நிற்கும் அனுபவம் நிகழ்ந்தது. கிழவர் பேசுவதற்கு நாயாய் அலைந்தார் என்று எழுதியது பறந்து ரீங்கரிக்கத் தொடங்கியது. பேசுவதற்கு நாயாய் அலைந்தார் எனும்போது உணரும் அர்த்தத்தைச் சுற்றி ஒரு அமைதி. நல்ல சாப்பாடு சாப்பிட நாயாய் அலைந்திருக்கிறோம், தண்ணிக்கு நாயாய் ஒரு காலத்தில் அலைந்திருக்கிறோம் என ஊர்ப்பக்கம் சாதாரணமாகப் பேசுவதிலிருந்து  உருவான வாக்கியம் தான். 'உவரி' கதையில் பேருந்து, கன்னியாகுமரியைத் தாண்டி ஒரு சிறு ஊரைக் கடந்தவுடனேயே எல்லாம் இரண்டிரண்டாக மாறிச் சந்திக்கத் தொடங்குகிறது. உப்பளங்களின் காட்சியுடன் உப்புவண்டி பற்றிய குறிப்பு வருகிறது. ஆதிகாலத்தில் நாகரிகத்தை விரைவுபடுத்துவதற்கு உதவியாக இருந்த சக்கரங்களும் இன்றைய சக்கரங்களும் சந்திக்கின்றன. சக்கரங்களைப் பொறுத்தவரை பெரிய வேறுபாடு அவற்றின் வடிவத்தில் ஏற்படவேயில்லை என்ற குறிப்பு வருகிறது.  தன் முகத்தின...

பொருளின் புதுப்பொருள் கவிதை

பிரமிள், ஆத்மாநாம், அபி, தேவதேவன், பிரம்மராஜன் ஆகியோர் தமது கவிதைகளிலும் உரைநடைகளிலும் கவிதை நிகழும் கணத்தைப் பற்றி அரிதான அவதானங்களை வைத்துள்ளனர். கவிதையின் கண்களை நேருக்கு நேராகப் பார்த்தவர்கள் என்று அவர்களைச் சொல்வேன். அவர்களோடு கவிதையைத் தனது பிரதான வெளிப்பாடாகக் கொள்ளாமல் கவிதையின் கண்களை நேருக்கு நேராகச் சந்தித்து, அதுபற்றி அடிப்படையான சிந்தனைகளை ஒரு குழந்தைக்கும் புரியும்படி உரையாடும் தொனியில் பகிர்ந்துகொண்டவர் மா.அரங்கநாதன் என்பேன். அறிவு அல்ல, தகவல் அல்ல, அறிவியல் அல்ல, தத்துவம் அல்ல, மொழியும் அல்ல என்று சொல்லி, இதுவரை மொழியில் அறிந்த பொருளும் அல்ல என்று கவிதையை ‘பொருளின் பொருள் கவிதை’ நூல் மூலம் அணுகியவர் அவர். தமிழ் மட்டுமல்ல, ஆதிமொழிகள் புழங்கும் எல்லாச் சமூகங்களிலும் கவிதை பற்றிய உணர்வு இருக்கிறது; ஆனால், அதைப் பற்றிச் சொல்லத் தொடங்கும்போது அதன் வரையறை பிடிபடாத ஒன்றாகிவிடுவதை உணர்ந்திருக்கும் அவர், வார்த்தைகள் அற்ற மொழி, வண்ணங்கொண்டு தீட்ட முடியாத ஓவியம், ஒலி உருவம் அற்ற இசை, வடிவம் காணா ஒரு படிமம் என்ற இடத்துக்கு வருகிறார். கவிதை என்னவென்று கேட்கும் கேள்வியிலேயே தவறு இருக...