இந்தியாவின் முதல் இந்துக் கோயில் உதயமாகப்போகிறது. ராமர்தான் மூலவர். கோயில் என்று நாம் எதை அர்த்தப்படுத்தினாலும் , இந்த இந்துக் கோயில் தெய்விகத்தை அடையாளப்படுத்தவில்லை ; அடையாளப்படுத்தவும் முடியாது.இந்தக் கடவுளான ராமன், நவீன தேசிய – அரசு – மூலதனத்தின் அவதாரம் . மிக நெடுங்காலமாக உருவாக்கத்திலிருந்த கடவுள் இவன். இந்தியா என்று நாம் இப்போது அழைக்கும் நிலத்தில் குறுக்கும் நெடுக்குமாகப் பல நூற்றாண்டுகளாக அலைந்த ராமனிலிருந்து வேறுபட்டவன் இந்த ராமன். அவனைப் பற்றி ஏற்கெனவே இருக்கும் கதைகளுடன் புதிய சேர்க்கையாகச் சேர்பவன் அல்ல இந்தப் புதிய ராமன். இவன் ஒரு புதிய கதையை உருவகிப்பவன். இந்து என்று தயாராகிவருகிற ஒரு சமயத்தின் கடவுள் இவன். இவனுக்கு இறந்தகாலமோ எதிர்காலமோ இல்லை. இவனுக்கு நிகழ் மட்டுமே உண்டு. சீதா அல்லது லக்ஷ்மணன் அல்லது அனுமனை இவனது இப்பக்கத்தில் துணைகளாக்க முடியுமா என்று சந்தேகம்கொள்கிறேன். இவன் தசரத மன்னனின் மகனும் அல்ல. இவன் ராமன் ; இறந்த காலமோ எதிர்காலமோ இல்லாத தனி ராமன். விஷ்ணுவின் பதினொன்றாவது அவதாரம் இவன். இன்னமும் அவதரிக்காத பத்தாவது அவதாரமாகவும் இருக்கலாம். அத்துடன...