Skip to main content

Posts

Showing posts with the label ரேமண்ட் கார்வெர்

ரேமண்ட் கார்வரின் ‘இறகுகள்’

பிப்ரவரி மாத காலச்சுவடு இதழில் வெளியாகியுள்ள ரேமண்ட் கார்வரின் ‘இறகுகள்’ , சிறுகதை என்னும் வடிவம் இன்னும் கொண்டிருக்கும் புதுமையையும் வசீகரத்தையும் நினைவூட்டுவதாக இருந்தது . ஒரு நிகழ்ச்சியை அல்லது ஒரு அனுபவத்தை அசுவாரசியமானதாக , இனிமையற்றதாக , சங்கடத்துக்குரியதாக நாம் உணர்கிறோம் . அல்லது அப்படி ஒன்றாக நம் மனம் ஒரு நிகழ்ச்சியை மொழிபெயர்க்கிறது . ஆனால் , அந்தக் குறிப்பிட்ட நிகழ்ச்சியே ஒரு திருப்பத்துக்கு வழிவகுத்துவிடுகிறது . அது இனிமையானதாகவோ மோசமானதாகவோ இருக்கலாம் . ஆனால் இன்றியமையாத திருப்பமாக அது உள்ளது . ஜி . குப்புசாமி மொழிபெயர்த்திருக்கும் இந்தக் கதை அமெரிக்காவில் நிகழ்கிறது . சமீபத்தில் குழந்தை பிறந்த அலுவலக நண்பன் பட்டின் வீட்டுக்கு மனைவியோடு இரவு விருந்துக்குச் செல்லும் ஜேக்கின் பார்வையில் சொல்லப்படும் கதை இது . பட்டின் வீட்டில் வளர்க்கப்படும் ஜோயி என்ற மயிலும் , பட் - ஓலா தம்பதியினரின் அழகேயற்ற குண்டுக் குழந்தையும் தான் இந்தக் கதையின் மையம் . இந்தக் கதையில் மயில் அறிமுகமானவுடன் இந்தக் கதை ஒரு இந்தியக் கதை ஆகிவிடுகிறது .  ஜோயி என...