Skip to main content

Posts

Showing posts with the label புலம்பெயர் தொழிலாளர்கள்

வீடு என்பது இடம் மட்டும் அல்ல - ஓவியர் மருது நேர்காணல்

வீ டு திரும்புதல் எனும் நிகழ்ச்சியும், வீடு திரும்புதல் என்பதன் பொருளும் புராதன காலத்திலிருந்து எல்லாப் பண்பாடுகளிலும் மதிப்போடு பார்க்கப்படுகிறது. போர்கள், வணிக யாத்திரைகள், ஆன்மிகப் பயணங்கள் என எல்லாவற்றிலும் வீடு வந்து சேருதல் என்பது முழுமையாகவும் பூர்த்தியாகவும் பார்க்கப்படுகிறது. நவீன இந்தியாவின் உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கு காலாட்படையினராகச் செயல்பட்டுவரும் அந்தப் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு நமது கார்ப்பரேட் இந்தியா குறைந்தபட்சக் கூலியை இதுவரை உத்திரவாதம் செய்யவில்லை. ஆனால் கரோனாவை முன்னிட்டு அவசர அவசரமாகப் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு தொடர்பில் குறைந்தபட்ச ஆசுவாசத்துடன் ஊர் திரும்பும் கௌரவத்தைக்கூட அவர்களுக்கு அளிக்கத் தவறிவிட்டோம். ஊரடங்கு தொடங்கியதிலிருந்து புலம்பெயர் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கில் வீடு திரும்புவதற்காகப் படும் அல்லல்களைப் பார்த்துப் பார்த்து எதிர்வினையாக ஓவியர் மருது தனது ஸ்கெட்ச் புத்தகத்தில் படங்களை வரைந்துகொண்டிருக்கிறார். ‘எனது கையறு நிலையில் இதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்?’ என்று கண்ணீரோடு தனது சித்திரங்களைப் பகிர்கிறார். அந்தச் சித்திரங்கள் குறித்து...