முதல் செல்ஃபி புள்ள அஸ்வமேத யாகத்துக்கு அரைக்குதிரையாவது வேண்டும் தேச வரலாறு, கலாச்சாரம், பொருள்சார் பண்பாடுகள், நாகரிகங்களின் உரையாடல், அரசியல் என்ற அகண்ட திரையின் பின்னணியில் தனிமனிதர்களை வைத்து, வாசகனின் முயற்சியையும் வேண்டும் எழுத்தைக் கொண்ட தனித்துவமான கதைசொல்லி பா.வெங்கடேசன். தமிழில் மட்டுமல்ல; சர்வதேச இலக்கியப் பின்னணியிலும் அழுத்தமாக வைக்கப்பட்ட தமிழ்ச்சுவடாக வெங்கடேசனின் முந்தைய நாவல்களான ‘தாண்டவராயன் கதை’, ‘பாகீரதியின் மதியம்’ ஆகியவை விமர்சகர்களால் கொண்டாடப்பட்டன. மூதறிஞர் ராஜாஜியின் ஊரான ஓசூரைக் களனாகக் கொண்ட மூன்று சகோதரிகளின் குடும்பத்துக் கதையே வெங்கடேசனின் மூன்றாவது நாவலான ‘வாராணசி’யின் ஓரடுக்காகும். இந்த நூற்றாண்டுக்கு முந்தைய அந்த அடுக்கில் பெண்களின் பகல் கனவுகளும், இன்னொரு அடுக்கில் அதே காலகட்டத்திய ஆண்களின் ரகசிய வடிகாலாக இருந்த சரசப் புத்தகக் கதைகளில் இடம்பெறும் பாலியல் சாகசக் கதையின் உள்ளடக்கமும் ஊடிழையாகப் புனையப்பட்டுள்ளது. வாராணசி என்ற அதீதத்தின் நிலத்தில் நிர்வாணம் எனும் அதீதத்தை வைத்து பா.வெங்கடேசன் எடுத்திருக்கும் புகைப்படமே ‘வாராணசி’ என்று சொல்லி