சூடாமணியின் தேர்ந்தெடுத்த கதைகளை ஆண்டுவாரியான வரிசையில் படித்துப் பார்க்கும்போது , இந்திய சுதந்திரத்துக்குப் பின்னர் நமது சமூகம் மெதுமெதுவாக நவீனமயமதாலுக்கு உட்பட்டு பழைய மரபுகள் அசமந்தமாக விடைபெறுவதைப் படிப்படியாகக் காணமுடிகிறது . வீடுகளுக்கும் தெருக்களுக்கும் நடந்த ஆத்மார்த்தமான உரையாடல்கள் என அக்கதைகளை எளிதாகச் சொல்ல முடியும் . இந்த உரையாடல்களில் மனிதர்கள் மற்றவர்களின் இருப்புக்கு நெகிழ்கிறார்கள் . இவர் கதைகள் பெரும்பாலும் நடுத்தர , கீழ்நடுத்தர வாழ்க்கைப் பின்னணியிலிருந்து எழுதப்பட்டவை . மிகவும் சன்னமான சம்பிரதாயக் கோட்டை தாண்டவே முடியாதவை . ஆனால் அசட்டுலட்சியங்கள் பேசாத அறவலுகொண்ட நவீன நீதிக்கதைகள் அவை . நவீன கல்வி , புதிய வாய்ப்புகள் , வசதிகள் , செய்திப்பரவல் அனைத்தும் பரவலாக உருவாகத் தொடங்கும் நவீனத்துவ காலத்தைச் சேர்ந்தவை சூடாமணி கதைகள் . வசதிகளும் உணவு உள்ளிட்ட வளங்களும் நாம் இன்று துய்ப்பதுபோல உபரியாக இல்லாத காலநிலை அது . உணவுகள் பற்றாக்குறையாக இருந்த பாத்திரங்களின் மிச்ச இடத்தை , புதிய மதிப்பீடுகளும் புதிய உலகக் கனவுகளும் நிறைத்திருப்பதை உணரமுடிகிறது . முதல் த