ஷங்கர்ராமசுப்ரமணியன் “ பத்மஸ்ரீ விருது என்பது பாஜக அரசு கொடுக்கும் விருது அல்ல ; இந்தியா என்ற தேசம் கொடுக்கும் விருது . ஆனாலும் அவதூறுகளுக்கு அஞ்சி அதை மறுக்கிறேன் என்று ஜெயமோகன் கூறியிருக்கிறார். அதுதான் எனது புரிதலும் கூட. அத்துடன் இந்த விருது குறித்த அனைத்து விவரங்களும் நடவடிக்கைகளும் எனக்குத் தெரியுமென்றும் ஜெயமோகன் கூறியிருக்கிறார். உயர் அதிகார மட்டத்தில் இருக்கும் நண்பர்களும் ஜெயமோகனுக்கு பத்மஸ்ரீ அங்கீகாரத்தை ஜெயமோகனுக்கு வாங்கிக் கொடுப்பதில் ஆர்வமாக இருந்ததாக அவரே தனது இணையத்தளத்தில் தெரிவித்தும் உள்ளார். இதுகுறித்த எனது அபிப்ராயம் என்னவெனில், பத்மஸ்ரீ விருதை இந்தியாவின் குடிமகனாக அவர் வாங்கியிருக்க வேண்டுமென்பதே. பத்மஸ்ரீ விருது மட்டுமல்ல, பத்ம்பூஷன், பத்மவிபூஷன், பாரதரத்னா என்று எத்தகைய விருதுகளுக்கும் அவர் தகுதியானவர் என்பதே என் போன்ற தமிழ் வாசகர்களின் நிலைப்பாடும் கூட. பெனடிக்ட் ஆண்டர்சன் போன்றவர்கள் வழி என்னைப் போன்ற 'சிறிய' குடிமக்களைப் பொறுத்தவரை தேசியம் என்பது கற்பிதம் தான். யாரோ ஒருவரது கற்பனையில் இதெல்லாம் நடக்கிறது. தேசியம் என்பதை தொ