Skip to main content

Posts

Showing posts with the label ஆத்மாநாம்

ஏ. கே. ராமானுஜனின் கவிதையில் ஆத்மாநாம்

கவிஞர் ஆத்மாநாம், தனது இறுதிநாட்களில் படித்த நூல் ஏ. கே. ராமானுஜன் மொழிபெயர்த்த ‘ SPEAKING OF SHIVA ’. கவிஞர் பிரம்மராஜன் எழுதிய சிறு வாழ்க்கைக் குறிப்பில் தெரியவரும் தகவல் இது.  பசவண்ணர், அல்லமப்பிரபு, அக்கமகாதேவி போன்ற வசன கவிகளின் கவிதைகளை அந்த நூலின் வாயிலாக மொழிபெயர்த்து மேற்குலகுக்கு அறிமுகம் செய்தார் ராமானுஜன். ஆத்மாநாமின் கவிதைகள் பற்றி அவர் இறந்தபின்னர் சில ஆண்டுகள் கழித்து அறிந்துகொண்ட ராமானுஜன், 1991-ல் ‘எனக்கு அவன் அல்லது அவனுக்கு நான்’ என்ற தலைப்பில் ஆங்கிலக் கவிதையை எழுதியிருக்கிறார். இன்னதென்று வரையறுக்க முடியாத ஒரு பிணைப்பு ஆத்மாநாமுடன் இருப்பதாக ராமானுஜன் உணர்ந்ததை கவிதையின் அடிக்குறிப்பு தெரிவிக்கிறது. கவிஞர் ந. ஜயபாஸ்கரன் இந்தக் கவிதையை எனக்கு அறிமுகம் செய்தார். ஒரு தளர்வான மொழிபெயர்ப்பையும் அவர் மேற்கொண்டிருக்கிறார். நான் இதைத் திரும்ப மொழிபெயர்த்திருக்கிறேன். ந ஜயபாஸ்கரனின் கட்டுரை, மொழிபெயர்ப்பைப் படிக்க :  https://www.shankarwritings.com/2021/03/blog-post_11.html     எனக்கு அவன் அல்லது அவனுக்கு நான்   பத்து நூற்றாண்டுக்கு முன்னர்...

எலும்புகள் வாழ்கின்றன

இந்தப் பூமியில் ஜனிக்கும் ஒவ்வொரு புதிய உயிரும் ஏற்கெனவே பழகிய அமைப்புக்குள்தான் வந்துவிழுகிறது. ஏற்கெனவே திட்டமிடப்பட்ட சட்டங்களுக்குள், இலக்கணங்களுக்குள் இருப்பதும், இருப்பதற்கு ஒப்புக்கொடுப்பதுமான ஒரு அமைப்பைத்தான் அரசு என்கிறோம். ‘அழகு’என்று ஒன்றைக் கருதும்போது, சமூகத்தில் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு வடிவத்தைத்தான், உருவத்தைத்தான், அமைப்பைத்தான் அழகென்று சொல்கிறோம். அழகுக்குள், வடிவத்துக்குள், அமைப்புக்குள் வராதவையும் இந்த உலகத்தில் உண்டு. புறக்கணிக்கப்பட்ட உயிர்களாக, மனிதர்களாக, மக்கள் குழுக்களாக அவர்கள் இருக்கின்றனர். மன்னராட்சியிலும் சரி, மக்களாட்சியிலும் சரி எப்போதும் அவர்கள் இருந்து கொண்டேதான் இருக்கிறார்கள். மொழி, படைப்பு, சிந்தனை இவற்றுக்கும் இது பொருந்தும். புதிய சிந்தனைகள், புதிய எழுத்துகள், புதிய புரட்சிகள் எல்லாமே ஏற்கெனவே உள்ள அமைப்பிலிருந்துதான் முரண் பட்டும் அனுசரித்தும் எழுகின்றன. மொழிதான் நமக்கு ஒரு உலகத்தைக் கொடுக்கவும் செய்கிறது. அதேவேளையில், மொழி தான் இந்த உலகத்தைத் துரதிர்ஷ்டமாக வரையறுத்தும் விடுகிறது. கவிதைகளை வார்த்தைக் கூட்டம் என்று சொன்ன கவிஞன் ஆத்மாநாம்....

ஆத்மாநாம் கேட்கச் சொல்லும் பிச்சை

நீ ஒரு பிச்சைக்காரனாய்ப் போ பிச்சை பிச்சை என்று கத்து பசி இன்றோடு முடிவதில்லை உன் கூக்குரல் தெரு முனைவரை இல்லை எல்லையற்ற பெருவெளியைக் கடக்கணும் உன் பசிக்கான உணவு சில அரிசி மணிகளில் இல்லை உன்னிடம் ஒன்றுமேயில்லை சில சதுரச் செங்கற்கள் தவிர உனக்குப் பிச்சையிடவும் ஒருவருமில்லை உன்னைத் தவிர இதனைச் சொல்வது நான் இல்லை நீதான். - ஆத்மாநாம் ஆத்மாநாம் எழுதிய   ‘ பிச்சை ’   எனும் கவிதையின் உள்ளடக்கத்துக்குப் போகும் முன்பாக அதன் குரல் ,   தொனியின் சிறப்பைக் கவனிக்க வேண்டும். யாருடைய குரல் அது என்று கேட்டுப்பார்க்க வேண்டியிருக்கிறது. அந்தக் குரலையுடையவன் எங்கே நிற்கிறான் என்பதைக் கேட்டுப்பார்க்க வேண்டியிருக்கிறது. உரத்துப் பேசுபவன்போலத் தொனித்து ,   கடைசியில் மோனத்துக்குள் உறையவைக்கும் அனுபவம் உள்ளது. சாதாரணன்போல இந்தக் குரலையுடையவன் தெரிகிறான். அவன் பேசுவது சகஜ ஞானம்போல இருக்கிறது. உச்சாடனம் கட்டளையிடுதலின் சமத்காரம் இருக்கிறது அந்தக் குரலில். பிச்சையும் யாசகமும் வாழ்க்கை முறையாக மெய்தேடுதலுக்கு உகந்த நெறியாகப் பார்க்கப்பட்ட ஒரு நிலத்...

ஆத்மாநாம் : மொழியின் கனவு கவிதை

ஷங்கர்ராமசுப்ரமணியன் நாளை நமதே கண்களில் நீர் தளும்ப இதைச் சொல்கிறேன் இருபதாம் நூற்றாண்டு செத்துவிட்டது சிந்தனையாளர் சிறு குழுக்களாயினர் கொள்கைகளை கோஷ வெறியேற்றி ஊர்வலம் வந்தனர் தலைவர்கள் மனச் சீரழிவே கலையாகத் துவங்கிற்று மெல்லக் கொல்லும் நஞ்சை உணவாய்ப் புசித்தனர் எளிய மக்கள் புரட்சி போராட்டம் எனும் வார்த்தைகளினின்று அந்நியமாயினர் இருப்பை உணராது இறப்புக்காய்த் தவம் புரிகின்றனர் என் ஸக மனிதர்கள் இந்தத் துக்கத்திலும் என் நம்பிக்கை நாளை நமதே ஆத்மாநாமின் ஆளுமையை முழுமையாகப் பிரதிநிதித்துவம் செய்யும் கவிதை இது. மென்மையும் உரத்த தன்மையும் சேர்ந்தொலிக்கும் கவிதைகள் அவருடையவை. நமது வாழ்க்கையின் வெவ்வேறு சந்தர்ப்பங்கள் மற்றும் அனுபவச் சூழல்களின் பின்னணியில் நினைவில் வைத்துக்கொள்ளக்கூடிய வரிகளை அவர் எழுதியிருக்கிறார். ‘நாளை நமதே’, பிரத்யேக உரையாடல் தொனியைக் கொண்ட ஆத்மாநாமின் சிறந்த கவிதைகளில் ஒன்று. பாரதி, பாப்லோ நெரூதா போன்ற பெருங்கவிஞர்களைப் போலக் கவிதையை, சமூக நடவடிக்கையாக மாற்ற ஆசைப்பட்ட ஒரு குரல் ஆத்மாநாம். கவிதை என்ற கலைவடிவத்தின் அழகியலையும், பற...

ஆத்மாநாம் நினைவுதினக் கட்டுரை

சூரியனைத் தொட முயன்ற வண்ணத்துப்பூச்சி ஷங்கர்ராமசுப்ரமணியன்                        கோட்டுச்சித்திரம் :   ஆதிமூலம் ஆத்மாநாம் மறைந்து முப்பது ஆண்டுகள் ஆகப்போகிறது . நிறைவாழ்வு வாழ்ந்து பெரும் அனுபவப்பரப்பை உட்கொண்ட படைப்புலகம் அல்ல அவருடையது . 33 வயதில் அகாலமாக மரணமடைந்த ஒரு கவிஞனிடம் அதை எதிர்பார்க்கவும் முடியாது . ஆனால் ,  தான் முற்றுமுழுக்க ஒரு கவிஞன் என்ற ஓர்மையோடு , தனது பிரதான வெளிப்பாட்டு வடிவாக ஏற்றுக்கொண்ட ஒரு ஆளுமையின் வெற்றிகளும் தோல்விகளுமாக 147 கவிதைகள் நமக்கு வாசிக்கக் கிடைக்கின்றன . பழந்தமிழ் இலக்கிய மரபின் தளைகளோ , செல்வாக்கோ அவர் கவிதைகளில் இல்லை.     உலகம் முழுக்க அவர் காலகட்டத்தில் நடைபெற்ற அரசியல் மற்றும் கலை இயக்கங்களுக்குத் தன்னை ஒப்புக்கொடுத்து எதிர்வினைகளும் ஆற்றியிருக்கிறார் . அவரது மொழிபெயர்ப்புகள் , சிற்றிதழ் செயல்பாடுகள் மற்றும் நட்புறவுகள் மூலம் அவற்றைத் தெரிந்துகொள்ள முடிகிறது . இந்திய நிலத்தில் கால்பதித்திருந்த ...