Skip to main content

Posts

Showing posts from October, 2014

நான் பார்க்க வேண்டும்

 ஷங்கர்ராமசுப்ரமணியன்   கழிமுகத்தில் தேங்கிநிற்கும் கருப்பு நீர் ஆடியின் மேல் பறக்கும் பறவையின் பிம்பத்தை அது கரையைக் கடக்குமுன் நான் பார்க்க வேண்டும்

இப்போதெல்லாம்

 ஷங்கர்ராமசுப்ரமணியன்   குற்றம் என்னும் காகத்தை காமத்தைத் தன் பெயராகச் சூடிய புறாவை வேங்கையை மீனை இப்போதெல்லாம் காணவே முடியவில்லை

வேறு புறாக்கள்

 ஷங்கர்ராமசுப்ரமணியன் பறக்கும் ரயில் நிலையத்தின் தண்டவாள இடுக்கில் நிற்கிறது ஒரு புறா ரயில் கடந்துசென்ற பிறகு மெதுவாக  தண்டவாளக் கட்டைகளிடையே நடக்கிறது முதுமையோ நோயோ தெரியவில்லை இனி அதனால் பறக்க இயலாது ரயில் தண்டவாளத்தின் கருத்த மசித்தடங்கள் வழியாக குறைவான வெளிச்சத்தில் மெதுவாக நடக்கிறது கழுத்தில் கண்களில் அலகில் சிறகில் எந்தத் துடிப்பும் இல்லை இன்னும் சில தப்படிகள் தூரத்தில் ஜன்னல்கள் நிர்மலமான நீலவானம் கடல் வெளிச்சம் எல்லாம் இருக்கிறது அவை இன்று வேறு புறாக்களால் நிரப்பப்பட்டு விட்டன இந்தப் புறா தன் வாழ்வில் நோயைத் தவிர வேறு எந்த ஒரு குற்றமும் இழைக்கவில்லை ஆனாலும் அது தன் வாழ்க்கையின் மகத்தான குற்றமூலையில் நிற்கிறது

திருட்டுக் காக்கை

  ஷங்கர்ராமசுப்ரமணியன் அந்தரத்தின் படிக்கட்டில் ஏறி என் வீட்டு சமையலறை ஜன்னலுக்கு சோறுண்ண வந்தது ஒரு காகம் அது என்னைப் போல ஒரு திருட்டுக் காகம்

எறும்புகள்

பாகிஸ்தானியக் கவிஞர் சைதுதீன் இந்த பூமியில் எத்தனை மைல்கள் எறும்புகள் நடக்கின்றன எத்தனை எறும்புகள் நம் பாதங்களின் கீழே நசுக்கப்படுகின்றன அவை எண்ணமுடியாதவை ஆனால் நமது உடலின் மீது எறும்புகள் ஊரும்போது நம்மால் அவற்றை எண்ணமுடியும் அவற்றின் பயணங்களைப் பற்றி  ஓரளவு மதிப்பீட்டைச் செய்யமுடியும் உங்கள் உடலிலிருந்து ஒரு கடிக்கும் எறும்பை எப்படி அகற்றுவீர்கள் அதை ஒரு எறும்போ அல்லது அதன் முறிந்த உறுப்புகளோ சொல்வதற்கு முடியலாம் எறும்புகளின் வீடுகள் பற்றி  வேறு எதுவும் உங்களுக்குத் தெரிந்திருக்காது அவை கதவுகளின் இடைவெளிகளில் வசிக்கின்றன அல்லது சுவர் விரிசல்களில் அல்லது இரவு முழுவதும் நகர்ந்துகொண்டே இருக்கின்றன. ஆனால் அவை எங்கே கூடுகின்றன என்பதையும் ரகசியக் கூட்டங்களை நடத்தும் இடம் பற்றியும் உங்களால் அறிய இயலாது. ஆனால் நீங்கள் விரும்பும் தேன் சர்க்கரை சீசா அல்லது ஒரு இறைச்சித் துண்டு அவற்றின் உணவு சேமிப்பாக மாறிவிடும் எண்ணமுடியாத அளவில் அவை கூடிவிடும் உங்களை எண்ணற்றத் துண்டுகளாக்கி தங்களுக்குள் பிரித்துக்கொள்ளும் அத்து