Skip to main content

Posts

Showing posts with the label ஏ கே ராமானுஜன்

ஏ. கே. ராமானுஜனின் கவிதையில் ஆத்மாநாம்

கவிஞர் ஆத்மாநாம், தனது இறுதிநாட்களில் படித்த நூல் ஏ. கே. ராமானுஜன் மொழிபெயர்த்த ‘ SPEAKING OF SHIVA ’. கவிஞர் பிரம்மராஜன் எழுதிய சிறு வாழ்க்கைக் குறிப்பில் தெரியவரும் தகவல் இது.  பசவண்ணர், அல்லமப்பிரபு, அக்கமகாதேவி போன்ற வசன கவிகளின் கவிதைகளை அந்த நூலின் வாயிலாக மொழிபெயர்த்து மேற்குலகுக்கு அறிமுகம் செய்தார் ராமானுஜன். ஆத்மாநாமின் கவிதைகள் பற்றி அவர் இறந்தபின்னர் சில ஆண்டுகள் கழித்து அறிந்துகொண்ட ராமானுஜன், 1991-ல் ‘எனக்கு அவன் அல்லது அவனுக்கு நான்’ என்ற தலைப்பில் ஆங்கிலக் கவிதையை எழுதியிருக்கிறார். இன்னதென்று வரையறுக்க முடியாத ஒரு பிணைப்பு ஆத்மாநாமுடன் இருப்பதாக ராமானுஜன் உணர்ந்ததை கவிதையின் அடிக்குறிப்பு தெரிவிக்கிறது. கவிஞர் ந. ஜயபாஸ்கரன் இந்தக் கவிதையை எனக்கு அறிமுகம் செய்தார். ஒரு தளர்வான மொழிபெயர்ப்பையும் அவர் மேற்கொண்டிருக்கிறார். நான் இதைத் திரும்ப மொழிபெயர்த்திருக்கிறேன். ந ஜயபாஸ்கரனின் கட்டுரை, மொழிபெயர்ப்பைப் படிக்க :  https://www.shankarwritings.com/2021/03/blog-post_11.html     எனக்கு அவன் அல்லது அவனுக்கு நான்   பத்து நூற்றாண்டுக்கு முன்னர்...

ஏ கே ராமானுஜனின் வைகை, பழைய வைகை

  மதுரை    கோரிப்பாளையம் ஆல்பர்ட் விக்டர் மேம்பாலத்தின் கீழே பெரும்பாலும் பழம்குப்பைகள், புதர்கள் சூழ்ந்த வெம்பரப்பாய் பெரும்பாலும்   வைகை நதியை பகலிலும் இரவிலும் கனவுகாணும் மணல்பரப்பில், பரட்டையாய் சோனியாய் ஒரு மட்டக்குதிரை மேய்ந்து கொண்டிருப்பதை அந்தப் பாலத்தை பேருந்திலோ நடந்தோ கடப்பவர்கள் நிச்சயம் பார்த்திருப்பார்கள். தேசலாக, கந்தலாக, தன் கம்பீரத்தை மறந்ததாகத் தெரியும் அந்த மட்டக்குதிரை, ஒரு தோல்வியைப் போல, ஒரு வீழ்ச்சியைப் போல, ஒரு சிதிலத்தைப் போல, ஒரு சிதைவைப் போல வைகைப் பாலத்தின் கீழே உள்ள மணல்பரப்பின் நடுவில் உள்ள மண்டபத்தை அச்சாக வைத்து மேய்ந்து கொண்டிருக்கிறது. அது எப்போது வந்து அங்கே இறங்கியதென்று தெரியவில்லை. எங்கிருந்து அந்தக் குதிரை இந்த இடத்துக்கு வருகிறது. திருவிளையாடற் புராணத்தின் காலத்திலிருந்து ஒரு குதிரை இப்படியாகி, கோரிப்பாளையத்திலிருக்கும் வைகை நதி செல்லும் வறண்ட பரப்புக்கு வருவது தொடர்ந்திருக்க வேண்டும். அப்படியென்றால் ஆல்பர்ட் விக்டர் பாலத்துக்குக் கீழே எத்தனை குதிரைகள் இப்படி வந்திருக்கும். இப்போது அந்தக் குதிரை மேய்ந்துகொண்டிருக்கிறதா...