ஜார்ஜ் ஆர்வெல் நினைவு தினத்தையொட்டி, ஹிட்லரின் மெய்ன் காம்புக்கு அவர் எழுதிய மதிப்புரையை ‘தி வயர்’ உள்ளிட்ட இணையத்தளங்கள் கவனப்படுத்தியிருந்தன. ஹிட்லர், ஸ்டாலின் ஆகியோர் மேற்கொண்ட சர்வாதிகார நடைமுறைகளை, அவை உச்சபட்ச துயரங்களைத் தந்தாலும் ‘மேலான நன்மை’ என்ற பெயரால், கடவுளர்களின் சோதனையாக விரும்பி, வெகுமக்கள் எப்படி ஏற்றுக்கொண்டார்கள் என்பதை ஜார்ஜ் ஆர்வெல் இந்த மதிப்புரையில் ஆராய்கிறார். ஹிட்லரின் ஆளுமையும் அவர் ஏற்படுத்திய பிம்பமும், வலிய விதியை எதிர்த்துப் போராடும் துயர நாயகனின் சாயலைக் கொண்டது என்கிறார். ஒரு எலியை எதிர்த்துக் கொல்வதாக இருந்தாலும் ஹிட்லர் போன்றவர்கள், அந்த எலியை முதலில் ஒரு டிராகன் போன்று பிரமாண்டமான எதிரியாக கதையாகக் கட்டமைத்து விடுவார்கள் என்கிறார் ஜார்ஜ் ஆர்வெல். கரோனோ போன்ற வைரசை, கருப்புப் பணத்தை, சிறுபான்மையினரை, எதிர்கட்சியினரை, பாகிஸ்தானை, போராடும் விவசாயிகளை பிரமாண்டமான எதிரிகளாகச் சித்தரித்துவிடும் மோடி ஞாபகத்துக்கு வருகிறார். ‘அச்சே தின்’ என்ற பெயரால் நல்ல தினங்கள் வரப்போகின்றன என்ற வாக்குறுதியுடன் ஆட்சிக்கு வந்த மோடி மக்கள் மேல் சுமத்திய அடுக்கடுக்கான துய