Skip to main content

Posts

Showing posts from December, 2017

பாஷோவின் பெண் பூனைகள்

ஷங்கர்ராமசுப்ரமணியன் மிகச் சமீபத்தில்தான் என் இடத்துக்குள் பூனைகள் வரத் தொடங்கியுள்ளன. ஒருவரின் தனியிடத்துக்குள் வரும்போதுதான் பொருட்கள், உயிர்கள், நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவமும் உண்டாகிறது. பூனைகள் என்று பன்மையில் சொன்னேன். ஆனால் உள்ளடக்கம் ஒரு பூனைதான். ஒரு பூனை வழியாகப் பல பூனைகள் அங்கிங்கெனாதபடி பரவிவிட்டன. அந்த ஒரு பூனை முதலில் என் மகளின் வழியாகத்தான் என்னிடம் வந்தது. நான் வழக்கமாக எல்லாவற்றையும் உள்ளே அனுமதிப்பதற்கு எதிர்ப்பதைப் போலவே அதையும் வேண்டாம் என்றேன். அவள் அதற்கு உணவிட்டாள். சீராட்டினாள். ஒருகட்டத்தில் நானும் அது வரும் வேளைகளில் கவனிக்கத் தொடங்கினேன். அது தெருப்பூனைதான். அதிகாலை நடைப்பயிற்சிக்குக் கதவைத் திறக்கும்போது அது வாலை உயர்த்தியபடி கால்களைத் தேய்த்துக்கொண்டு உள்ளே வருவதையும் வாசல் திரைச்சீலையின் அடிப்பாகத்துடன் சண்டை போடுவதையும் ரசிக்கவும் ஆரம்பித்தேன். அதற்குப் பால், பிஸ்கெட்டுடன் பால்கோவாவும் சுவைக்கத் தந்தேன். அதன் முகம் என்னில் கனியத் தொடங்கியபோது என் கருப்பை கசிய ஆரம்பித்திருக்க வேண்டும். நான் பேணிவரும் பாதுகாப்புக் கவசங்களை எல்லாம் விரை

அஷ்டாவக்கிரர் அஷ்டாவக்கிரி

ஷங்கர்ராமசுப்ரமணியன் ஹென்றி   கார்ட்டியே   ப்ரஸ்ஸனின் கருப்பு   வெள்ளை   புகைப்படத்தில் தான் ரமணரை   அவன்   முதல்முறை பார்த்தான் பெண்கள்   போல   மார்பிலிருந்து   தொ டை   வரை வெள்ளை முண்டு   அணிந்திருந்தார் அவர்   வளர்த்த பசு லக்ஷ்மி அவரது   கால்களுக்கிடையே தலை   நீட்டிக்   கொண்டிருந்தது ரமணர்   அவனுக்கு   ஒன்றைச்   சொன்னா ர் அவன்   கேட்கவேயில்லை முதல்   புகைப்படம்   வழியாக அவன்   தனது   இருபதுகளில் அடைந்த   உணர்வு   சற்று   அசூயை இரைஞ்சும்   அவர்   கண்களைப்   பார்ப் பதைத்   தவிர்த்தது இப்போதும்   ஞாபகத்திலிருக்கிறது இருபது   ஆண்டுகள் ஓடிவிட்டன ரமணரை   அவன்   படிக்கத்   தொடங்கினா ன் ரமணரின்   படங்களையும் பார்த்தான் அறுக்கும்   அவரது   கண்களைப்   பார் க்க ஆசையாக   இருக்கிறது   அவனுக்கு அவரது   சொற்கள்   அவனது   மனச்சல்லடை யைத்   தாண்டி கேட்கத்   தொடங்கியிருக்கின்றன சொற்கள்   சொற்கள்   சொற்கள் சந்தேகம்   எழத்   தொடங்கியுள்ளது சமீபத்தில்   பார்த்த   வீடியோ   ஒன் றில் ரமணர்   பி

இதாகா

காண்ஸ்டாண்டைன் பி. கவாஃபி இதாகாவுக்குச் செல்லத் தயாராகும் போது உங்கள் பாதை நெடியதாகவும் முழுக்க முழுக்க சாகச ங்கள்   கண்டுபிடிப்புகளைக் கொண்டதாகவும் இருக்கட்டுமென்று பிரார்த்தியுங்கள் . லஸ்ட்ரிகோனியன்ஸ் , சைக்லோப்ஸ் ,  கோபம் உமிழும் பொசீடியானைப் பார்த்து அச்சம் வேண்டாம் . உங்களது எண்ணங்களை உயரத்தில்   வைத்திருக்கும் வரை அபூர்வமான ஒரு கிளர்ச்சி உங்கள் உயிரையும் உடலையும் கிண்டிக்   கொண்டிருக்கும் வரை அதைப் போன்றவற்றை உங்கள் வழியில்   காணவே மாட்டீர்கள் . உங்கள் ஆன்மாவுக்குள் அவர்களை நீங்கள்   கொண்டு வராவிட்டால் உங்கள் ஆன்மா உங்களுக்கு முன்   அவர்களைக் கொண்டு வந்து   நிறுத்தியிருக்காவிட்டால் லஸ்ட்ரிகோனியன்ஸ் , சைக்ளோப்ஸ் ,  காட்டுமிராண்டி பொசீடியானை நீங்கள் எதிர்கொள்ளவே மாட்டீர்கள் உங்கள் பயணத்தடம் நீண்டதாக   இருக்கவேண்டுமென   வேண்டிக்கொள்ளுங்கள் நீங்கள் இதுவரை பார்த்திராத  துறைமுகங்களைக் காணும்போது அத்தனை   மகிழ்ச்சி , உற்