Skip to main content

Posts

Showing posts from September, 2022

நகுலனின் ‘பூனை’

    (ந. ஜயபாஸ்கரனின் சேகரிப்பிலிருந்து எனக்கு நேற்று தபாலில் வந்த நகுலனின் குறிப்பிடத்தகுந்த உரைநடைக் கவிதை ‘பூனை’. காவ்யா பதிப்பகம் வெளியிட்ட நகுலன் கவிதைகள் தொகுப்பில் இடம்பெறவில்லை.கவிஞர் நா. காமராசனின் ஆசிரியத்துவத்தில் வந்த பத்திரிகையான ‘சோதனை’யில் 1973-ம் ஆண்டு மே மாதம் வெளியாகியுள்ளது இந்த ‘பூனை’.நகுலனின் பிரத்யேக உலகம் தீவிரமாக இயங்கும் படைப்பு இது. காமத்தில், கலவி உணர்ச்சியில், அதன் வேகத்தில், இம்சையும் அகிம்சையும் பாலும் புலாலும் நீயும் நானும் வியர்வையும் ரத்தமுமாக அமானுஷ்யமும் மரணமுமாகப் பின்னிப் பிணைந்திருக்கும் விபரீத வசீகரத்தை பூனை வழியாக உருவாக்கியிருக்கிறார் நகுலன். சிருஷ்டி ரகசியம் சுடர்கிறது இப்படைப்பில்!)   கட்டமைந்த உடல்கட்டு, தட்டை முகத்தில் கூர்ந்த முக்கோண வடிவை நினைவு கூரும் நாசி, உருண்டு ஜொலிக்கும் “நீல”க் கண்கள், மெத்தென்ற பாதம்; பழமொழியைப் பொய்யாக்கி, இரவைப் பகலாக்கி, பாலுக்கும் மீனுக்கும் ஒற்றுமை காட்டி உருவங்காட்டும் நின் உருவம்; நிசப்தத்தில்   நினைவின் அடிச்சுவடும் மறைந்த நள்ளிரவில் இருட்குழம்பில், “இச்”சென்று ஊரும் சர்ப்பத்தின்...

காஃப்காவின் சுய உணர்வு, விழிப்பால் தீண்டப்பட்டு பூச்சியான க்ரகர் சேம்சா

  இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னால் வேளச்சேரி பூங்காவில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, முகக்கவசம் அணிந்த அறுபது வயதைக் கடந்த ஒருவர், நடைப்பயிற்சியை முடித்து பெஞ்சில் அமர்ந்து கழுத்தை மெதுவாக வலது புறமும் இடது புறமும் திருப்பி கடப்பவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தார். முகக்கவசத்தோடு இருந்த முகம் அச்சத்தை வெளியிட்டபடி இருந்தது. மக்கள் தொகையில் ஒரு வர்க்கத்தினரின் முகங்களில் பெருந்தொற்று காலத்துக்குப் பிறகும் முகக்கவசம், முகங்களிலேயே இயல்பாக ஒட்டித் தங்கிவிட்டது போலத் தோன்றுகிறது. அவர்கள் முகக்கவசத்தை பூர்வ இயல்பாக மாற்றிக் கொண்டுவிட்டனர். பெருந்தொற்றை முகாந்திரமாகக் கொண்டு முகக்கவசத்தை அவர்களது உறுப்பைப் போல மாற்றிக் கொண்டுவிட்டனர். முகக்கவசம் அவர்களை அச்சம் கொண்ட எலிகளாக மாற்றிவிட்டது. உயர்சாதியினரில் பலர், முகக்கவசத்துக்கு மிகவும் ஆசையோடு தகவமைத்துக் கொண்டுவிட்டனர். நான் இதற்கு முன்னர் வேலைபார்த்த ஊடக நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி, பெருந்தொற்றுக்குப் பிறகு, தனது அறையை விட்டே வெளியே வரவில்லை என்று சொல்லப்படுகிறது. சவரத்துக்குக் கூட யாரையும் அனுமதிக்காமல் தாடி ...

ஞானக்கூத்தனின் விடுபட்ட நரி

     க டவுள், தத்துவம், அரசு எல்லாவற்றின் பார்வையிலுமே யாரோ எதுவோ எவர்களோ விடுபட்டுவிடுகின்றனர். அந்த விடுபட்டதின் குரலையே இலக்கியம் எடுத்துக் கொள்கிறது என்பதை ஞானக்கூத்தனின் ‘விட்டுப் போன நரி’ கவிதை கூடுதலாகப் புரியவைத்துவிடுகிறது. வரலாறு, தத்துவம் சாராம்சப்படுத்தும் உண்மைக்கு மாறானதொரு மெய்மையாக அதனாலேயே இலக்கியம் திகழ்கிறது. திருவிளையாடற் புராணத்தின் புகழ்பெற்ற படலமான ‘பரி நரியாக்கிய படலம்’- ல் இந்த விடுபட்ட நரியை பரஞ்சோதி முனிவர் பார்க்கவேயில்லை. ஓடுகின்ற நரியில் ஒரு நரியாக முகவரி இன்றி இருந்த அந்த நரிக்கு ஒரு குடியானவனின் உருவத்தையும் குரலையும் ஞானக்கூத்தன் நவீனகவிதையில் தருகிறார். அவன் எப்போதும் எளியவனாக வரலாற்றில் தொடர்பவன்.   சிறுவன் இல்யூஷாவின் இறுதி ஊர்வலத்தில் சவப்பெட்டி மீது இடப்பட்டிருந்த   பூ உதிர்ந்து விழுகிறது. அந்த நிகழ்ச்சி கடவுளுக்குத் தெரியுமா என்று இறுதி ஊர்வலத்தில் பங்குபெறும் நாயகன் அல்யோஷா கேட்கிறான். சரித்திரம், தத்துவம், அரசு, கடவுள் என கண்டும் காணாமல் விடப்பட்ட, உதிர்க்கப்பட்ட மலர்களை தெரியுமா தெரியுமா என்று கேட்டுக்கொண்டு பி...

மன் கி பாத்....கர்தவ்யா பாத்

    முகக்கவசம் இட்டு மாறிப்போன எலிகளின் நடுவே ஒன்று பூனை.   அச்சத்தில் முகம்கூம்பி மாறிப்போன எலிகளின் நடுவே ஒன்று பூனை.   எலிகளுக்கும் பூனைகளுக்கும் பேதமே இல்லை என்று அந்தப் பூனை ருத்திராட்சத்தை உருட்டிக் கொண்டே சொன்னது   எலிக்குப் பூனை நண்பன் புதுவேதம் உரைத்தது   நம்பி அருகில் போன எலியை எடுத்து வாயில் போட்டுச் சுவைத்து திரும்பக்  கண்களை மூடிக்கொண்ட பூனை வயிற்றைத் தடவிக் கொண்டு அன்னமே ப்ரம்மம் என்றது பெருமூச்சு விட்டுக்கொண்டு அடுத்த நிலையில் பிராணனே ப்ரம்மம் என்றது ஏப்பம் ஒன்றை விட்டு கண்களைத் திறந்து பார்த்து இன்னமும் சில எலிகள் குரு குருவென்று நின்று ஏமாறத் துடித்துக் கொண்டிருந்த காட்சியைக் கண்டு கண்களில் சிரிப்புடன் முகக்கவசப் பூனை ஆனந்தமே ப்ரம்மம் என்றது   தின்னப் போகும் எலிகளின் காதில்  குனிந்து ஓதியது கடமையே பிரம்மம் என்றும் அதற்குக் கடமையே பாதை என்றும் சொல்லி  தன் வாயில் கடைசியாக வழியைக் காட்டியது கடைசியாக.  

காஃப்காவின் விசாரணை

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் பிறந்த ஃப்ரன்ஸ் காஃப்கா, நவீனமாகி வரும் உலகில் வாழ நேரந்த மனிதனின் துயரங்களை இலக்கியம் வழியாக மிக நுட்பமாக பரிசீலனை செய்தவர். மாறிவரும் மனித உறவுகள், அவனின் தனிமை, தனிமனிதனுக்கும் அமைப்புகளுக்கும் இடையிலான மோதல்கள், அமைப்புகள் முன் மனிதன் சின்னஞ்சிறிய பரிதாபகரமான உயிராக மாறிநிற்பது ஆகியவற்றை காஃப்கா துல்லியமாக விசாரணை செய்துள்ளார். மனிதனை ‘ஆரோக்கியமாகவும்’ ‘அகிம்சை’ முறையிலும் சிறைப்படுத்திய, அவர்களை வளர்ப்பு மிருகங்களாகச் சுருக்கிய அலுவலகம் என்னும் தீங்கைப்  பற்றி தனது உருவகக் கதைகள் வழியாக பல்வேறு சித்திரங்களை காஃப்கா உருவாக்கியுள்ளார்.  விசாரணை நாவலில் கண்ணுக்குப் புலப்படாத காவல் அமைப்பின் கீழ்நிலை ஊழியர்களால் யோசப் க. ஒரு நாள் காலை, எந்தக் காரணமும் இல்லாமல் அவன் அறையில் படுக்கையிலிருந்து எழும்முன்பாகவே கைது செய்யப்படுகிறான். அதைத் தொடர்ந்து தன்னை எப்படியாவது குற்றத்தின் பிடியிலிருந்து விடுவிக்க தொடர்ந்து போராடுகிறான். நீதி அமைப்பின் குளறுபடிகளை தன் மீது தவறாக போடப்பட்ட வழக்கின் வழியாக சரிசெய்யவும், எதிர்த்துப் போராடவும் துணிபவன். ஆனால் ப...