Skip to main content

Posts

Showing posts with the label ஆஹா சாஹித் அலி

தமிழில் ஆஹா சாஹித் அலி கவிதைகள்

ஆஹா சாஹித் அலி, 1949-ல் டெல்லியில் பிறந்தார். காஷ்மீரில் பெற்றோருடன் இளமைப்பருவத்தைக் கழித்தார். 1976-ம் ஆண்டு அமெரிக்காவில் குடியேறி இலக்கியப் பேராசிரியராகப் பணியாற்றினார். இந்தோ – அமெரிக்க கவிஞராக புகழ்பெற்ற அவரது ஆதர்சக் கவிஞர் எமிலி டிக்கன்ஸன். எமிலி வாழ்ந்த ஆம்ஹெர்ஸ்ட் நகரத்துக்குப் பக்கத்திலேயே 2001-ம் ஆண்டு மரணத்தைத் தழுவினார். ஜம்மு – காஷ்மீரில் வலுப்பெற்ற வன்முறையும் அதை அடக்குகிறேன் என்ற பேரில் தொடங்கிய அரச வன்முறைச் சம்பவங்களால் ஏற்பட்ட மனித உரிமை மீறல்களும் அவரது பிற்காலக் கவிதைகளில் தாக்கம் செலுத்தியது.  உணர்வுப்பூர்வமான தன் பால்யகால நினைவுகளுடன் அவர் தனது கவிதைகளில் காஷ்மீர் வெளிப்பட்டபோதுதான் அவரது கவித்துவ வாழ்க்கை உச்சத்தை அடைந்ததாக நாவலாசிரியர் அமிதவ் கோஷ் குறிப்பிடுகிறார். அவரது புகழ்பெற்ற கவிதைத் தொடரான ‘The Country Without a Post Office’ அவருக்கு சர்வதேச கவனத்தை அளித்தது. அந்தக் கவிதைகளும் இத்தொகுப்பில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.  ஜம்மு – காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து பறிக்கப்பட்டு அங்குள்ள மக்கள் கூடுதலான நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கும் நிலையில் ஆஹா சாஹித்...

மதியத்தில் டெல்லிக்கு திரும்புவதை நான் கனவு காண்கிறேன் - ஆஹா சாகித் அலி

புராணாகிலாவில் நான் தனியாக  தர்யாகஞ்சுக்குச் செல்லும் பேருந்துக்காகக் காத்திருக்கிறேன் அது வந்துகொண்டிருப்பதை நான் பார்க்கிறேன்  நானோ வெறுங்கையோடு நிற்கிறேன்  " ஏறு , ஏறு " என்று யாரோ கத்துகிறார்கள்  “ வருடக்கணக்கில் நான் இந்தச் சில்லறையை உனக்காகச் சேர்த்துவைத்திருக்கிறேன் . பார் "  ஒரு கை திறக்கிறது , முழுக்க வெள்ளி நாணயங்கள்   “ ஏறு ஏறு " அந்தக் குரல் நிற்கவேயில்லை   அங்கே எனக்குத் தெரிந்தவர் யாரும் இல்லை . ஒரு போலீஸ்காரன்  கையில் விலங்குகளுடன்  எனது பயணச்சீட்டைக் கேட்கிறான் . நான் ஓடும் பேருந்திலிருந்து குதித்திறங்குகிறேன்  எனது கேசத்திலிருந்து வியர்வை வழிகிறது  நான் டால் மியூசியத்தை ஓடிக் கடக்கிறேன்  டைம்ஸ் ஆப் இந்தியா கட்டிடத்தின் தலைப்புச் செய்திகளை  கடக்கிறேன் , பீகார் சிறையில் குருடாக்கப்பட்ட கைதிகள்  நிலச்சுவான்தார்களால் தீக்கிரையாக்கப்பட்ட அரிஜன கிராமங்கள்  ஓடி இரைக்கிறேன்  நான் கோல்சா திரையரங்குக்கு வெளியே  தர்யாகஞ்சில் நிற்கிறேன் . சிகரெட்டைப் பற்றவைத்தபடியே சிரித்தபடி  சுனில் அங...

வீடுகள் - ஆஹா சாகித் அலி

அந்த மனிதன் தனது வீட்டை மணலில் புதைக்கிறான் ஒவ்வொரு மாலையிலும் அதைத் தோண்டி வெளியே எடுக்கிறான் சீக்கிரமாகவே அதைத் திரும்பவும் கச்சிதமாக வைப்பதற்கு கற்றபடி அத்துடன் அத்தனை வேகத்தில் வெளியே எடுக்கவும். எனது பெற்றோர்கள் இருளில் குழந்தைகளைப் போல உறங்குகின்றனர் அவர்கள் சுவாசிப்பதைக் கேட்கமுடியாத தொலைதூரத்தில் நான் ஆனால் அவர்களது வீடு பாதுகாப்பாக இருப்பதாகவே ஞாபகம் அத்துடன் நான் உறங்கவும் முடியும் அந்த இரவின் கூந்தல் கருப்பாகவும் அடர்த்தியாகவும் எனது கைகளுள். எனது பெற்றோர்கள் இருளில் உறங்குகின்றனர். நிலவு எழும்போது, அந்த இரவின் கூந்தல் எனது தோள்களில் நரை வெள்ளையாக மாறுகிறது. நான் வீட்டிலிருந்து பதின்மூன்று ஆயிரம் மைல்கள் தூரத்தில் இருக்கிறேன். நான் இரவின் நிலவுக்கு தலைசீவிவிடுகிறேன் எனது பெற்றோரோ குழந்தைகளைப் போல உறங்கிக் கொண்டிருக்கின்றனர். "எனது தந்தை இறந்துவிட்டார்,” விதுர் எழுதுகிறான், "அத்துடன் எனது பகுதியில் உள்ள  எனது பெற்றோர்கள் இருக்கும் வீட்டுக்கு அருகில் உள்ள வீடு, எரிக்கப்பட்டு விட்டது." கடிதத்தைத் தொடர்ந்து படிக்கிறேன், நான் விழித்தெழுந்தால் எனது உடல் நீராக இருக்க...

நீ இருக்கும் நகரை நீங்குதல் - ஆஹா சாகித் அலி

நள்ளிரவு மதுவிடுதியில்  உனது மூச்சு என் மீது சரிந்து விழுந்தது .  உனது புன்னகையின் நுனியில் நான் சமநிலைப்படுத்திக் கொண்டேன் ,  உனது வார்த்தைகளைப் பற்றியபடியே  இருட்டுப் படிகளில் ஏறினேன் . கடும் சிரத்தை ,  மரணத்துக்காக  உனது அறைகலன் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருந்தது  கோட்டிக்கார வெள்ளியால் பளபளப்பாக்கிய  கத்தியை நீ நிலவின் மேற்பரப்பில் வைத்து  கூர்மையாக்கிக் கொண்டாய் . போதை நாக்குடன் கவிதையைப் பாடிய  நீ  நேசத்துடன் இருந்தாய்  நான் நினைத்தேன் : கடைசியாக ! தற்போது  நான் உள்ளும் புறமுமாக  உனது நினைவில்  அலைந்து திரிகிறேன் ,  எங்கெ நான் போனாலும்  நான் உன்னிடம் பேசிக்கொண்டிருக்கிறேன் . எனது வறுமைகளுக்குள் என்னைச் சுருக்கிக் கொண்டுவிட்டேன்  அத்துடன்  உன்னை  இருப்பதிலேயே விலைமதிப்பு கொண்ட நீலத்துடனான கடல்  எங்கே இருக்கிறதோ  அந்த இன்னொரு நாட்டின் நிம்மதியற்ற கனவுக்குள் . 000 எனது விரல் , உனது தொலைபேசி எண் அதன் நுனியில்  இரவுக்கு டயல் செய்கிறது .  உனது நகரமோ  எனது க...

டெல்லி பற்றிய தொலைந்த நினைவு - ஆஹா சாஹித் அலி

நான் பிறக்கவில்லை அப்போது 1948 பெயர் இல்லாத சாலை ஒன்றில் அந்தப் பேருந்து திரும்புகிறது அங்கே எனது தந்தை அவருடைய சைக்கிளில் அவர் என்னைவிட இளையவராக ஓக்லாவில் நான் இறங்குகிறேன் ஜமுனா நதியோரம் நடந்து எனது பெற்றோர்களைக் கடக்கிறேன் என் அம்மா புது மணப்பெண் ஜரிகையின் ஜூவாலை அவளது சேலை வெள்ளிப்பொடி அவளது கூந்தலைப் பிரிக்கிறது அவள் என்னைப் பார்க்கவில்லை அவளது கொலுசின் சலங்கை சப்தம் தொலைவில் சீனாவிலிருந்து வரும் ஒலியைப் போல தேநீர்க் கடைகளில் அரிக்கேன் விளக்குகள் ஏற்றப்படுகின்றன கண்ணாடி நாக்குகளுடன் மணியடித்தபடி நட்சத்திரங்கள் வெளியே வரத் தொடங்கின அவர்கள் வீட்டுக்குள் சென்று குடும்ப ஆல்பத்தில் புகைப்படங்களாக எப்போதுமாக மங்கிவிட்டனர் உப்பரிகையில் உடைந்த நிலையில் நான் பார்த்த எண்ணெய் விளக்கோ தற்போது ஒளியேற்றப்பட்டுள்ளது அவர்களை விட மூத்த வெகுவாக மூத்த நான் அவர்களது மகனென்று அவர்களிடம் சொல்ல வேண்டும் நான் கதவைத் தட்டுகிறேன் தட்டிக்கொண்டே இருக்கிறேன் ஆனால் அவர்களுக்கோ இரவு அமைதியானது எனது இருப்பின் இந்த இந்த இரவில் அவர்கள் என்னைக் கேட்கவில்லை அவர்கள் என்னைக் கேட்கவும் மாட்டார்கள் நட்சத்திரங்களின் நாவு...