Skip to main content

Posts

Showing posts from January, 2014

ஏன் குழந்தைகள் அழுகின்றன?

ஷங்கர்ராமசுப்ரமணியன் குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்கின்றன அதனால் அழுகின்றன அதைத் தெரிந்துகொண்டே அவை அழுகின்றன வாயில் வைத்திருக்கும் பிளாஸ்டிக் பொம்மையை பிடுங்கினால் அழுகின்றன பெயர் வைக்கும்போது அழுகின்றன முதல் கேக்கை வெட்டி எல்லாரும் ஹேப்பி பர்த்டே பாடும்போது அழுகின்றன மொபைல் கருவியைச் சப்பக்கொடுக்காமல் பிடுங்கினால் அழுகின்றன பலூன்கள் உடைந்துபோனால் அழுகின்றன   உற ங்கும்போது முத்தம் கொடுத்தால் அழுகின்றன எழுந்து நிற்கும்போது சிரமம் ஏற்ப ட்டு அழுகின்றன காலுறைக்குள் கையைச் சிக்கவிட்டு முக்காலிக்குள் மாட்டிக்கொண்டு அழுகின்றன விஷவாயுத் தாக்குதலில் அழாமலேயே கண்விழித்தபடியும் இறந்து போகின்றன போர்களில் என்ன நடக்கின்றதென்றே தெரியாமல் இந்தக் குழந்தைகள் நம்மைக் கைவிட்டுவிடுகின்றன இவர்கள் இவர்கள்தான் நொடியை விடச் சிறுகணத்தில் அநாதைகள் ஆவதற்கு அழதபடி காத்திருக்கிறார்கள் குழந்தைகள் அழுவது அவர்கள் நுரையீரலுக்கு நல்லது நானும் என் ஆரோக்கியத்திற்காக அழுகிறேன் ( நன்றி : http://thechive.com/2013/07/24/the-reasons-why-kids

பறவைகள் வெறும் படிமங்களாக இருந்தபோது- ஆசையின் கவிதைகள்

ஷங்கர்ராமசுப்ரமணியன்   சென்னை இலக்கியத் திருவிழா அமைப்பின் சார்பில் விருதுபெற்ற மூத்த எழுத்தாளர் கி.அ.சச்சிதானந்தன் மற்றும் கவிஞர் ஆசைக்கு எனது வாழ்த்துகள். ரவி சுப்ரமணியன், தமிழச்சி தங்கபாண்டியன், சந்தியா நடராஜனுக்கு எனது வணக்கம்.   புத்தகப் பதிப்பில் நேர்த்தியையும் தொழில்முறை ஒழுங்கையும் கொண்டுவந்த க்ரியா பதிப்பகத்தில் பத்தாண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றியவர் கவிஞர் ஆசை. க்ரியாவின் புகழ்பெற்ற தற்காலத் தமிழ் அகராதிப் பணியிலும், பதிப்புப் பணிகளிலும் மிகுந்த அனுபவம் பெற்றவர். க்ரியா வெளியிட்ட உமர் கய்யாம் கவிதைகளை தங்க.ஜெயராமனுடன் இணைந்து இவர் மொழிபெயர்த்துள்ளார்.   இவரது முதல் கவிதைத் தொகுதியான சித்து நூலில் உள்ள கவிதைகள், தமிழ் புதுக்கவிதை மரபின் பல்வேறு கூறல்முறைகளை வரித்துக்கொண்டு, நேர்த்தியான மொழியில் தத்துவ விசார நோக்குடன் அமைதியான த்வனியுடன் எழுதப்பட்டவை.   90 களின் இறுதியில் விசாரம் துறந்த, புனைவுத்தன்மை அதிகம் கொண்டு சமகால வாழ்வின் பல்வேறு சித்திரங்கள் கொண்டு வெளிப்பட்ட நவீன கவிதைகளின் புதிய தன்மையையும், உக்கிர உணர்வையும் ஆசையின் கவிதைகளில் பார்க்க

பார்க்க முடிந்தால்

ஷங்கர்ராமசுப்ரமணியன் உதிர்ந்து விழுந்துகிடக்கும் இந்த தென்னங்குரும்பையைப் போல மனம் இன்றி கண்கள் இன்றி கண்ணீர் இன்றி எல்லாவற்றையும் பார்க்க முடிந்தால்