பொய்களும் பிரசாரமும் துருவமயப்படுத்தப்பட்ட கருத்து தரப்புகளுமே இன்றைய, வெகுஜன இந்தியச் செய்தி ஊடகங்களின் எதார்த்தம்; அறிவு, நேர்மை, உண்மை பேசும் துணிச்சல் படிப்படியாகக் கழுவித் துடைக்கப்பட்ட பகட்டான இடங்கள்தான் இன்றைய செய்தி அறைகள். அதிகாரத்துக்கு முன்னால் குறைந்தபட்சம் உண்மைகளை எடுத்துப் பேசும் நேர்மை , அரசு அதிகாரம் சொல்லும் தரவுகளுக்கு மாறான எதார்த்தங்களைத் தரவுகளாக வைக்கும் அறம் அல்லது சாகசம் எல்லாம் பழைய மதிப்பீடுகளாக சீக்கிரமே ஒரு பாழ்படியும் இருட்டுக்குள் போன இடத்துக்குள் உரையாடுவதற்கு யாருமில்லாத தனிமையில், என்டிடிவியிலிருந்து வெளியேறிய செய்தியாளர் ரவீஷ் குமாரை, இந்த ஆவணப்படத்தில் பார்க்கிறோம். “நீங்கள் தனிமையாக உணரும் நிலையில், யார் உங்களோடு உரையாடிக் கொண்டிருக்கிறார்கள்” என்ற கேள்வியுடன் ஆரம்பிக்கிறது ‘WHILE WE WATCHED” ஆவணப்படம். அருந்ததி ராய் உரைப்பது போல ஒரு பெரும்பான்மைவாத சர்வாதிகாரமாக இந்தியாவை சீரழிவுக்குப் படிப்படியாக அவர்கள் அழைத்துச் சென்றுகொண்டிருக்கும் நடவடிக்கையில் ஒரு ஊடக நிறுவனமும் ஒரு செய்தியாளனும் எப்படி படிப்படியாக கழுத்து நெரிக்கப்படுகிறான் என்பதைச் ச...