Skip to main content

Posts

Showing posts from April, 2019

தேசியம் காட்டும் கோரமுகங்கள்

மார்டின் பட்லர் (போர்ச்சுகீசிய நாட்டில் வசிக்கும் மார்டின் பட்லர், சென்ற நூற்றாண்டைச் சேர்ந்த ரஷ்ய மெய்ஞானியான குர்ட்ஜிப் அவர்களின் நேரடி மாணவியான ரீனா ஹேண்ட்சின் உதவியுடன் ஆன்மப் பயிற்சிகளில் பல்லாண்டு காலம் ஈடுபட்டவர். மனித நிலைமைகள் பற்றிய ஆழமான புரிதலுக்கு இவர் வருவதற்கு ஸ்பினோஷா போன்ற தத்துவவாதிகளையும் முறையாகக் கற்றிருக்கிறார். martinbutler.eu  என்ற இணையத்தளத்தில் கட்டுரைகளையும் வீடியோக்களையும் தொடர்ந்து இட்டுவருகிறார். என் காலத்தையும் என்னைச் சுற்றியுள்ள நிலைமைகளையும் புரிந்துகொள்வதற்கும் இந்தச் சூழ்நிலைகளுக்குள் எனது விழைவுகள், ஆசைகள், வலிகள் ஆகியவற்றைக் குறைத்துக் கொள்வதற்கும், எனக்கு வழங்கப்பட்டுள்ள வளங்களினூடாக நிறைவாகவும் நீதியாகவும் இருப்பதற்கும் மார்டின் பட்லரின் எழுத்துகள் உதவிகரமாக இருக்கின்றன. அவரது எழுத்துகள் உரிமைத்துறப்பை அறிவித்திருப்பதால் எனக்குப் பிடித்தவற்றை இங்கே மொழிபெயர்த்து வெளியிடுகிறேன். இங்கே தொடர்ந்து அது வெளியாகும். தன்னில் மட்டுமே வேலை சாத்தியம் என்று நம்புபவர்கள் அவரது எழுத்துகளைத் தொடர்ந்து வாசிக்கலாம். மார்டின் பட்லர் என்னிடம் ஏற்படுத்த

அனுபவம் அனுபவிப்பது அனுபவிப்பவர்

ஜே. கிருஷ்ணமூர்த்தி அந்தப் பள்ளத்தாக்கு நிழலில் இருந்தது ; அஸ்தமிக்கும் சூரியனின் ஒளிரேகைகள் தூரத்து மலைகளின் உச்சியைத் தீண்டின ; மலைகளைப் பூசியிருக்கும் சாயங்காலத்தின் மினுமினுப்பு அவற்றின் உள்ளிருந்து வருவதுபோலத் தோற்றம் தருகிறது . நீண்ட சாலையின் வடக்கில் , மலைகள் தீக்குள்ளாகி மொட்டைத் தரிசாய்க் காட்சிதருகின்றன ; தெற்கிலிருக்கும் மலைகளோ பசுமையாகவும் புதர்கள் , மரங்கள் அடர்ந்தும் உள்ளன .  நெடிதாகப் போகும் சாலை , பிரமாண்டமும் எழிலும் கொண்ட இந்தப் பள்ளத்தாக்கை இரண்டாகப் பிரிக்கிறது . குறிப்பாக , இந்த மாலையில் மலைகள் மிகவும் நெருக்கமாக , மாயத்தன்மையுடன் , இலேசாகவும் மிருதுத்தன்மையுடனும் தெரிகின்றன் . பெரிய பறவைகள் உயர சொர்க்கங்களில் சாவதானமாகச் சுற்றிக் கொண்டிருக்கின்றன . தரையில் அணில்கள் மந்தமாக சாலையைக் கடக்கின்றன . அத்துடன் எங்கோ தூரத்தில் விமானத்தின் ரீங்காரம் கேட்கிறது . சாலையின் இரண்டு பக்கங்களும் ஆரஞ்சு தோட்டங்கள் , சீரான ஒழுங்கில் வரிசையாக உள்ளன . உஷ்ணமான ஒரு நாளென்பதால் பர்ப்பிள் சேஜ் மலர்களிலிருந்த

எரிந்துபோன பாரிஸின் இதயம்

ஈபிள் கோபுரத்துக்கு முன்னரே நூற்றாண்டுகளாக பாரிஸின் சின்னமாக இருந்த நோத்ர தாம் தேவாலயம் கடந்த திங்களன்று எரிந்துபோனது .  நோத்ர தாம் என்றால் புனித அன்னை என்று அர்த்தம் .  உலகமெங்கும் வாழும் கத்தோலிக்கர்களுக்கான புனிதத் தலங்களில் ஒன்றாக விளங்கும் இந்தத் தேவாலயம் வரலாற்றுரீதியாகவும் பண்பாட்டு அளவிலும் கட்டிடக் கலை சார்ந்தும் முக்கியத்துவம் வாய்ந்தது . “ நோத்ர தாம் தேவாலயம் பிரெஞ்சு மக்கள் எல்லாருக்குமுரியது ;  இதுவரை அங்கே போயிராதவர்களுக்கும்” என்று கூறியிருக்கிறார் அந்நாட்டின் அதிபர் இமானுவேல் மெக்ரான் . ஆறாம் ஹென்றி முடிசூடிய ,  நெப்போலியன் பேரரசனாகப் பதவியேற்ற இடம் இது . 1163- ம் ஆண்டிலிருந்து  1345  வரை கட்டி முடிப்பதற்கு ஒன்றரை நூற்றாண்டை எடுத்துக்கொண்ட தேவாலயம் இது . விக்டர் ஹ்யூகோவின் நோத்ர தாம் “ கத்தோலிக்கர்களின் புனிதத் தலம் என்பதைத் தாண்டி பிரான்ஸ் நாட்டின் அரசியல் ,  சமூக ,  பண்பாட்டு ,  இலக்கிய வரலாற்றிலும் அந்தத் தேவாலயத்துக்கு இடம் உண்டு . 1793- ல் பிரெஞ்சு புரட்சி நடந்தபோது அந்தத் தேவாலயத்துக்குள் இருந்த சில மதகுருக்களின் தலைவர்கள் சிலைகளை அரசர்களின் சி