தமிழில்: ஷங்கர் விஜயவாடாவில் நான் பொறியியல் பட்டப்படிப்பு படித்துக்கொண்டிருந்த போது, ஸ்ரீதேவி நடித்த புதிய படம் வெளியாகும் போதெல்லாம் டிக்கெட் வாங்க வரிசையில் காத்திருக்கும்போது திரையரங்கின் வெளியே உள்ள விளம்பரத்தட்டிகளில் அவரது படத்தை அண்ணாந்து ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டிருப்பேன். அவரது அழகும் கவர்ச்சியும் மிக வலிமையானது. அவரிடம் இருந்த நடிகையை பார்வையாளர்களும் திரையுலகமும் தெரிந்து கண்டு உணர்வதற்கு நிறைய நிறைய வருடங்களும் படங்களும் தேவைப்பட்டன. என்னைப் பொறுத்தவரையில் அவரிடம் உள்ள நடிகையை மிகச்சரியான முறையில் மிஸ்டர் இந்தியா திரைப்படத்தின் மூலம் சேகர் கபூர் தான் வெளிப்படுத்தினார். அவர் ஆரம்பகாலங்களில் நடித்த படங்களிலேயே அவரது நடிப்புத்திறன் நன்கு வெளிப்பட்டிருக்கும். மிஸ்டர் இந்தியா திரைப்படத்தின் மூலம் பார்வையாளர்கள் புதிய ஸ்ரீதேவியை அடையாளம் கண்டனர். சேகர் கபூரின் அழகியல், அவரது அபாரமான அழகு மற்றும் நம்பமுடியாத நடிப்புத்திறன் இரண்டையுமே வெளிக்கொண்டு வந்தது. நான் எனது முதல்படமான சிவா(உதயம்) திரைப்படத்துக்கான வேலையில் இருந்தபோது ஸ்ரீதேவியுடனான எனது பயணம...