Skip to main content

Posts

Showing posts from November, 2023

நகுலனின் நூற்றாண்டில் எனது இன்னொரு புத்தகம் - நினைவின் குற்றவாளி

ஒரு எழுத்தாளனின் ஆக்கங்களாக , அவனது தொனியில் ஈடுபட்டு பிரதிபலித்து திரும்பத் திரும்ப மனத்தில் புறத்தில் புத்தகங்களில் போய் சரிபார்த்துக் கொண்டு ஆளுமையில் அவரைப் புதுக்கிக் கொண்டு நான் அதிக காலம் செலவழித்திருப்பது நகுலனுடன். பொருள் பொதிந்த ஒரு குடித்தனமாகவே நகுலனின் எழுத்துக்களுடன் இருபதாண்டுகளைக் கடந்த இந்த உறவைப் பார்க்கிறேன். 1997- ம் ஆண்டுவாக்கில் சுந்தர ராமசாமி அப்போது பாம்பன்விளையில் நடத்திவந்த நண்பர்கள் சந்திப்புக் கூட்டத்தை முடித்துக் கொண்டு , பெ. அய்யனாருடன் வலியத் தொற்றிக் கொண்டு நானும் தளவாய் சுந்தரமும் சண்முக சுந்தரமும் திருவனந்தபுரத்தில் உள்ள நகுலன் வீட்டுக்குச் சென்றதிலிருந்து அந்த உறவு தொடங்கியது. அவரைத் தீவிரமாக வாசிக்கத் தொடங்கியது 2004- க்குப் பிறகு. கிட்டத்தட்ட சிறியதாகவும் பெரியதாகவும் நகுலன் தொடர்பிலான எனது கட்டுரைகள் , குறிப்புகளை 17 ஆண்டுகளாக எழுதிவந்திருக்கிறேன். நகுலன் எழுத்துகள் குறித்த எனது டைரி இது. நகுலனை நான் தொடர்ந்து வரைந்துவைத்துக் கொண்ட சித்திரங்களின் கையேடு என்றும் சொல்லலாம். ஷ்ரோடிங்கரின் பூனை உள்ளடக்கத்தையே ஒரு பேச்சில் அளித்து எழு

நவபாஷாணத்தை இப்படித்தான் எழுதினேன் - கவிஞர் விக்ரமாதித்யன்

விக்ரமாதித்யனின் நவபாஷாணத்தை வாசிக்க : https://akazhonline.com/?p=4303 கவிஞர் விக்ரமாதித்யனின் நவபாஷாணம் நீள்கவிதை, தமிழின் சிறந்த நவீன காவியங்களில் ஒன்று. விக்ரமாதித்யனின் நவபாஷாணம் குறித்த எனது கட்டுரைக்காக அதன் பின்னணி பற்றி அவரிடம் நேர்காணல் செய்தேன். அது இங்கே பிரசுரிக்கப்படுகிறது.  நவபாஷாணம் தொடர்பிலான எனது கட்டுரையை வாசிக்க :  https://www.shankarwritings.com/2023/03/blog-post.html உங்களது நவபாஷாணம் எழுதியதற்கான தூண்டுதலைச் சொல்லுங்கள்? முதல் நான்கு கவிதைத் தொகுதிகள் வாயிலாக ஒரு சரளத்தையும் அதேவேளையில் ஒரு பழக்ககதியையும் உணர்ந்த நேரத்தில் நகுலனும் மொழிபெயர்ப்பாளர் ஆர். சிவகுமாரும் என்னை நெடுங்கவிதை ஒன்றை முயற்சி செய்துபாருங்கள் என்று 1987-88 ஆண்டுப்பகுதியில் ஊக்கம் கொடுத்தனர். எதையும் தானாக முயற்சி எடுத்துச் செய்ய விரும்பாத நான் அதெல்லாம் எனக்குச் சரிப்படாது என்று தயங்கிக்கொண்டேதான் இருந்தேன்.   அப்புறம் கோணங்கி வழியாகத் தொடங்குகிறீர்கள் இல்லையா? 1989-ம் ஆண்டு குற்றாலம் கவிதைப் பட்டறைக்குப் பிறகு எழுத்தாளர் கோணங்கியுடன் தேவிப்பட்டிணம், ராமநாதபுரத்தில் உள்ள திருஉத்திரகோசமங்க