Skip to main content

Posts

Showing posts from 2012

வெளி.ரங்கராஜனின் ஊழிக்கூத்தை முன்வைத்து

நண்பர்களே வணக்கம்...இந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் நண்பர்களே வணக்கம் என்று கூறுவது எப்படி ஐதீகமாக, பழக்கமாக மாறியுள்ளதோ இன்றைக்கு எழுத்தும் ஒரு பழக்கமாகி விட்டது..வெளி.ரங்கராஜனின் ஊழிக்கூத்து பற்றி எழுதப்பட இருக்கும் கட்டுரையை நீங்கள் கூகுளில் படித்துவிடலாம். கவிதை பழக்கமாகி உள்ளது, சிறுகதை பழக்கமாகியுள்ளது, மேடைப் பேச்சு பழக்கமாகியுள்ளது, நாவல் பழக்கமாக மாறியுள்ளது..தலையங்கங்கள் பழக்கமாக மாறிவிட்டன...மதிப்புரைகளும், கட்டுரைகளும், இரங்கல் எழுத்துகளும்,பத்திகளும் பழக்கமாக மாறியுள்ளன.. 90 களுக்குப் பிறகு கிரானைட் கற்களுக்காக தமிழகத்தில் மலைகள் மறையத் தொடங்கிய போதுதான் பெரிது பெரிதாக  புத்தகங்களும் வெளியாகத் தொடங்கின. இதை நாம் தனித்த நிகழ்வுகள் என்று கொள்ளமுடியுமா என்று எனக்குத் தெரியவில்லை. இரண்டுக்கும் உள்ள தொடர்பை நாம் பார்க்கத் தவறிவிட்டதும் ஒரு பழக்கத்தின் அடிப்படையில்தான். இந்தப் பழக்கம் உருவாக்கிய மௌடீகத்தில் தான் படைப்பு என்ற செயல்பாட்டின் அடிப்படை லட்சணங்களில் ஒன்றான எதிர்ப்பு, தனிமைக்குணம், பசியுணர்ச்சி, விசாரணை ஆகியவற்றை நாம் இழந்திருக்கிறோம். முரண்பாடுகள்

இரண்டு கவிதைகள்

முத்திரை பேருந்துக்கு காத்திருப்பவள் நடனபாவத்துடன் முந்திக்குள் விரல்விட்டு சேலை மடிப்புகளை நீ .............. வி விடுகிறாள் ஒரு கணம் அனைத்தும் திகைத்து நகர்ந்தன மேலிருந்துதான் பார்த்திருக்க வேண்டும் கடவுள் சபாஷ் சபாஷ் சபாஷ் என்றார் . 0000 ரயில்கள் எத்தனை யுகங்கள் எவ்வளவு கடவுள்கள் தத்துவம் கருணை சாப்பாடு அன்பு முத்தம் வந்து வந்து போகும் ரயில்கள் கண்ணீருடன் பிச்சை பிச்சையென்று தவழந்து ஏறி இறைஞ்சி திரும்புகிறேன் என் பாத்திரம் இதுவரை நிறையவே இல்லை . (காலம் சிறப்பிதழில் வெளியானது) புகைப்படம்: சிவா

வள்ளுவர் கோட்டத்துக்கும் மகாத்மா காந்தி சாலைக்கும் இடையே

புதிய நிறங்கள் புதிய புரட்சிகள் கேஎப்சியில் கோழி வறுபடும் நறுமணம் காற்றில் எண்ணைக்கான யுத்தங்கள் சொல்கிறார்கள் வனங்கள் அருகிவிட்டன தண்ணீர் விஷமாகிவிட்டது புலிகள் , குட்டிகள் தலைகுனிந்து கடவுளிடம் திரும்பிக்கொண்டிருக்கின்றன என்று சொல்கிறார்கள் போக்குவரத்து சிக்னல்களில் அலை அலையாக யாசிக்கும் பசி எமது காமத்தைவிட வன்மைகொண்ட ஆனால் மென்மையானதும் நுட்பமானதுமான ஆடைகள் உள்ளாடைகள் நட்பும் காதலும் சிக்கலும் ,   புதிருமாக மாறிய அந்தத் திருப்பத்தில் நாகலிங்க மரநிழலில் அவன் அவளுக்காகக் காத்திருந்தான் இன்னும் சில நொடிகளில் முழுவதும் இருட்டப் போகிறது அவனை நோக்கி தெற்கிலிருந்து வந்தாள் அவளின் முகம் தெரியவில்லை எல்லாம் கோடுகளாகி விட்டன தூத்துக்குடி சிங்காநல்லூர் பிரம்மபுத்ராவின் கரையோரம் சியரோ லியான் எந்த முகமாகவும் இருக்கலாம் புறங்கழுத்திலிருந்து உயரும் காலர்கொண்ட ஸ்வெட்டர் அணிந்திருந்தாள் அவள் அவனை நோக்கி வரும்போதே தோள்களை உயர்த்திவிட்டாள் அவனும் உற்சாகத்தில் முன் நகர்ந்தான் நான் பரவசம் கொண்டேன் ழாக் ப்ரெவரைப் ப

வேட்டை

சமையலறைக் கத்திதான் அதை எடுத்துப் பிடித்தால் மத்தியகால சண்டை சாகசங்களுக்கு அழைப்பு விடுக்கிறது . கை வேட்டைக்குப் பரபரக்கிறது போதும் காந்தி பிறந்தார் போனார் மீண்டும் வந்துவிட்டார் சொல்கிறார்கள் இனி எலுமிச்சம் பழத்தை நறுக்கினால் போதும் நீ .

மகாபாரதம்

ஷங்கர்ராமசுப்ரமணியன் சித்திரக்கதி பாணியில் மகாபாரதக் கூத்தின் நிகழ்வுகள் வரையப்பட்ட படங்களுக்கு கவிதைகள் எழுதவேண்டுவம் என்று நண்பர்கள் பாலாஜியும், காந்தியும் சொன்னார்கள். அந்தக் கவிதைகள் படத்திற்கான விளக்கங்களாகவோ , உரைகளாகவோ இல்லாமல் சமகாலப் பிரதிபலிப்பாக இருக்க வேண்டும் என்பது அவர்களது ஆசையாக இருந்தது . படத்தின் உள்ளடக்கத்தை ஒட்டியும் ஒட்டாமலும் நவீன கவிதைகளாக அவை இருக்க வேண்டும் என்பது அவர்களது எதிர்பார்ப்பு .   இந்தக் கவிதைகளின் த்வனியை , மூத்தக் கவிஞர்களான நகுலன் , ஞானக்கூத்தன் , விக்கிரமாதித்யன் ஆகியோரின் கவிதைகளிலிரு ந்து அமைத்துக் கொண்டேன் . கவிதையில் நீதி மற்றும் செய்தி அம்சம் இருக்கக்கூடாது என்று நான் எண்ணியிருந்தேன் . ஆனால் நீதி அம்சம் சில கவிதைகளில் தூக்கலாக இடம்பெற்றுவிட்டது . ' பொன்மொழிகளும் ' விரவிவிட்டிருக்கின்றன . நவீன கவிதை தொடர்பாக நான் கொண்டிருக்கும் எண்ணங்களோடு இந்த அம்சங்கள் சண்டை இடக்கூடியவை.   இந்தப் படங்களிலுள்ள கதாபாத்திரங்களின் நிறமும் , உடல்பாவங்களும் , கண்களும் அதீத உணர்வுகளை எ ன்னிடம் எழுப்பின . அது மகாபாரதத்தில் உள்ள அதீதம் த

சிறந்த சமூகவியல் எழுத்துகள் அழகாக எழுதப்பட்டவை தான்- ஆ. இரா. வேங்கடாசலபதி

  காலனிய வரலாற்றாய்வாளர்கள் வட்டத்தில் இந்தியாவிலிருந்து மதிக்கப்படும் பெயர்களில் ஒன்று இவருடையது . பாரதியார் , வஉசி , புதுமைப்பித்தன் ஆய்வுகளில் புதிய வெளிச்சங்களை உருவாக்கியவர் . நவீன தமிழ் சமூக உருவாக்கம் குறித்து இவர் எழுதிய அந்தக் காலத்தில் காப்பி இல்லை கட்டுரைகள் ஆய்வுநுட்பத்தையும் தாண்டி புனைவு போல வாசிப்பதற்கும் சுவாரசியமானவை . சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் பேராசிரியராகப் பணியாற்றிய போது த சன்டே இந்தியனுக்காக எடுத்த நேர்காணல் இது ... 17 வயதிலேயே வ உசியின் கடிதங்களை பதிப்பித்துவிட்டீர்கள் ... பெரிய வாய்ப்புகள் இல்லாததாக கருதப்படும் வரலாற்று ஆய்வில் இத்தனை ஈடுபாடு வருவதற்கான காரணம் என்ன ? ஏதாவது செய்யவேண்டும் என்ற வேகம் சிறுவயதில் இருந்தது . ஆனால் அதை செய்யக்கூடிய எந்தவகை ஆற்றலும் என்னிடம் இல்லை . எதிலும் நான் முதன்மையாக இருந்தது இல்லை . அப்போதுதான் புத்தகவாசிப்பில் ஈடுபாடு வந்தது . ஆங்கிலப்படிப்பில் இருந்து தமிழ்படிப்பின் மேல் காதல் ஏற்பட்டது . நான் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்ததால் பாடப்புத்தகங்களில் தமிழகத்தைப் பற்றி ஒரு செய்தியும் இருக்காது