ஈரானைச் சேர்ந்த தத்துவ ஆசிரியர் ராமின் ஜகன்பெக்லூவுடன் அசீஸ் நந்தி நடத்திய உரையாடல் நூலான Talking India-வின் சுருக்கமாக இங்கே மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அசீஸ் நந்தி 1937 இல் பிறந்தவர். சமூகவியல் படித்து உளவியல் மருத்துவராகப் பயிற்சிபெற்றவர். அரசியல் உளவியலாளர் என்று தன்னைப் பற்றி அவர் கூறுகிறார். மனித இயல்பிலும் , பொதுவாழ்க்கை தொடர்பாகவும் தனக்கு இருக்கும் ஆழ்ந்த விருப்பை அரசியல் உளவியலாளர் என்ற பெயரே நியாயம் செய்வதாக கருதுகிறார்.நவீனத்துவத்துக்குப் பின்பான காலகட்டத்தில் காந்தியை மறுநிர்மாணம் செய்தவர்களில் மிகவும் முக்கியமானவர் அசீஸ் நந்தி. வெவ்வேறு அறிவுமுறைகள் மற்றும் கலாச்சாரத் தரப்புகள் வெறுப்போ , விலக்கமோ இல்லாமல் உரையாடுவதை தொடர்ந்து வலியுறுத்துகிறார் அசீஸ் நந்தி. இன்று வெவ்வேறு அடையாளத் தரப்புகளும் , அதன் அரசியல் தர்க்கங்களும் பரஸ்பரம் மூர்க்கமாக மறுப்பதும் , விலக்குவதாகவும் , வெறுப்பதாகவும் மாறியுள்ள தமிழ் சூழலில் அசீஸ் நந்தியின் உரையாடல் தன்மையை நாம் பரிசீலிப்பது அவசியமானது. வெகுமக்களின் வாழ்க்கைமுறை , விழுமியங்கள் மற்றும் நம்பிக்கைகள் மேல் கொண்டுள்ள ' உண்...