Skip to main content

Posts

Showing posts with the label வே. நி. சூர்யா

வஸ்துகளும் குணங்களும் உரையாடும் கவிதை

ஒரு கவிஞனின் முதல் தொகுப்பை அவகாசம் எடுத்துப் படிக்கத் தொடங்குவதற்கும், படபடப்பு இன்றி அவன் புழங்கும் பிரபஞ்சத்தை அவதானிப்பதற்கும், பொதுமைப்படுத்தி விடமுடியாத என்வகையிலான ஒரு முறைமையே எனக்குக் கைகொடுக்கிறது.  அதை நான் இன்னொருவருக்குப் பரிந்துரைக்க மாட்டேன். எனினும், வே. நி. சூர்யாவைப் பற்றிப் பேசும்போது அந்த முறைமை குறித்து முதல்முறையாகப் பேசிப் பார்க்கலாம் என்ற தைரியத்தை அடைகிறேன்.  குழந்தைகளிடமும் விலங்குகளிடமும் என்னைப் பரிச்சயப்படுத்திக் கொள்ளும் முறைக்கு ஒப்பானது அது. எனக்குத் தெரிந்த, அனுபவமான உலகத்தின், முகங்களின் சாயல் கொஞ்சம்போல இருக்கும் குழந்தைகளின் முகங்களிடம் சீக்கிரம் ஈர்க்கப்படுகிறேன். என் முகத்தின் சாயலையும் அதில் பிரதிபலித்துப் பார்க்கிறேன் என்பதைக் கூடுதலாக உங்களிடம் விளக்க வேண்டியதில்லை. அந்தப் பிரதிபலிப்பின் வழியாக முதல் ஈடுபாடும் முதல் உறவும் எனக்கு அந்தக் கவிஞனிடத்தில், அவனது கவிதைகளினிடத்தில் ஏற்படுகிறது.  அந்தப் பிரதிபலிப்பின் கைப்பிடித்து எனக்குப் பரிச்சயமில்லாத அனுபவம், சாயல்கள், உயிர்கள் உலவும் அவனுடைய பிரபஞ்சம் அறிமுகமாவதற்கு நடுக்கத்தோடு, ஆனால...

ரோஜாவின் பாதைகள் முடிவற்றது சூர்யா

மொழியின் மாபெரும் ஆரவாரத்துக்கு இடையே பகட்டு ஆபரண சரசரப்புகளுக்கு மத்தியில் ஒரு அமைதி அமர்ந்திருக்கும் உணர்வைத் தருபவை வே. நி. சூர்யாவின் கவிதைள். மிக எளிமையானதும் மிக அபூர்வமானதுமாக இருக்கும், ஆதியிலிருந்து கவிதை அடையத் துடிக்கும் இடங்களில் ஒன்றாக இருக்கும் அந்தப் பிரதேசத்தில் வசிப்பதற்குத் துணிச்சலாக வந்து சேர்ந்திருப்பவர் வே. நி. சூர்யா. அவர் எழுதுபவற்றை எனக்கு உடனுக்குடன் படிக்கும் சந்தர்ப்பத்தையும் வழங்கியிருக்கிறார்.  நேற்று அவரிடம் இருந்து வந்த கவிதையைப் படித்தபோது, கவிதையின் மையப் படிமமாக இருக்கும் ரோஜாவை வேறொன்றாக இடம் மாற்ற முடியுமா என்று திரும்பத் திரும்பப் படித்து யோசித்துப் பார்த்தேன். உலகிலேயே பலவீனமான ரோஜாவாகவே அது சூர்யாவின் கவிதையில் இடம்பிடிக்கிறது.  ஞாபத்தின் துயர் தந்த சுகவீனத்திலிருந்து பலவீனமாக ஆகியிருக்கும் ரோஜா தான் அது. அது பலவீன ரோஜா மட்டுமல்ல. திரும்பத் திரும்ப மொழியில் கவிதையில் பயன்படுத்தப்பட்டு தேய்க்கப்பட்ட ரோஜாவும் கூட.  எனக்கு ரோஜாவை இந்தக் கவிதையிலிருந்து இடம்பெயர்க்க வேண்டுமென்ற ஆவல். ஆனால், பலவீனமாகத் தெரிந்தாலும் இந்தக் கவிதையின் ஆதாரத...

நகுலனிடமிருந்து பிரிந்த இறகு

நவீன கவிதையில் நகுலனுக்குத் தொடர்ச்சி இருக்குமா? என்ற கேள்விக்குப் பதிலாக, நகுலனின் குணமுள்ள கவிதைகளுடன் வே. நி. சூர்யா ‘கரப்பானியம்’ தொகுப்பிலேயே தென்பட்டார். அந்த முதல் தொகுப்புக்குப் பிறகு எழுதிவரும் கவிதைகளில் நகுலனின் பழைய தத்துவப் பாலத்தை அ- தத்துவம், புனைவு, அதிலிருந்து பிறக்கும் தனி விசாரத்தால் கடந்து சுலபமாகப் போவதைப் பார்க்க முடிகிறது. தாயுமானவரும், பாரதியும் தப்பமுடியாத வேதாந்தச் சுமை கொண்ட மனிதனை, நவீனன் சந்திக்கும் இடம் தான் நகுலன். அதனால்தான், நித்தியப் புதுமையும் நித்தியப் பழமையுமாகத் தெரியும் மகனை அம்மா ஸ்பரிசித்துத் தடவும் தருணத்தை விவரிக்கும்போதும், ‘மறுபடியும் அந்தக் குரல் கேட்கிறது, நண்பா, அவள் எந்தச் சுவரில் எந்தச் சித்திரத்தைத் தேடுகிறாள்?’ என்று. அது அரதப்பழசான அறிவொன்று, திண்ணையிருட்டில் அமர்ந்து கேட்கும் கேள்வி. அந்தக் கேள்விக்கு முன்னால் உள்ளதுதான் கவிதை. அந்தக் கேள்வியைச் சந்தித்து, அதை தனது படைப்புகளில் உலவ விட்டு, பழையதையும் புதியதையும் விசாரித்து புதுக்கவிஞனுக்கே உரிய சுயமான புனைவுப் பிரதேசத்தை நகுலன் தனது படைப்புகள் வழியாக உருவாக்கியிருக்கிறார்....