Skip to main content

Posts

Showing posts from December, 2013

நடனக்கலைஞர் சந்திரலேகா - சுதந்திரத்தின் எல்லைகளை விஸ்தரித்தவர்

ஷங்கர் 20 ஆம் நூற்றாண்டு,   உலகளவில் பல மாற்றங்களையும், உடைப்புகளையும் கண்ட நூற்றாண்டாகும். அடிமைப்பட்ட தேசங்கள் சுதந்திரக் காற்றைச் சுவாசித்தது ம், சிந்தனை மற்றும் கலைகள் ஜனநாயகப்படுத்தப்பட்டு, மரபின் தடைகள் உடைந்து நவீனத்துவம் கொண்டதும் இக்காலகட்டத்தில்தான். செய்யுளாக இருந்த கவிதை வடிவம், நவீன கவிதையாகியது. நவீன ஓவியமாக மாற்றம் கொண்டது. அந்தப் பின்னணியில் இந்தியாவில் மரபாக இருந்த நடனவடிவை அதன் பழைய அலங்காரங்களைக் களைந்து நவீன வடிவமாக்கியவர் சந்திரலேகா. இவர் நடனம் என்ற வடிவத்தோடு தன்னைச் சுருக்கிக் கொள்ளவில்லை. இந்தியாவில் உருவான பெண்ணிய இயக்கத்துக்கு முக்கிய தூண்டுவிசையாக இருந்தவர். நெருக்கடி நிலை    காலகட்டத்தில்,கருத்து சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல் உருவான நிலையில் அரசுக்கு எதிராகக் குரல் எழுப்பியவர். போஸ்டர் வடிவமைப்பாளர்,   ஓவியர் மற்றும் கவிஞர். இந்திய வாழ்க்கை முறை மற்றும் கலைமரபின்   நல்ல அம்சங்களைப் புறக்கணிக்காமலேயே தனது கலையை நவீனப்படுத்திய முக்கியமான ஆளுமை சந்திரலேகா. 1928 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், மகாராஷ்டிர மாநிலமான வாடாவில் செல்வச்செழிப்புள்ள குடும்ப

இரு குற்றவாளிகள்

ஹிட்ச்காக் அவர்களே, இன்னும் பிறக்காத ஒரு குற்றத்துக்காக உங்கள் வீட்டு ஜன்னலை இரவில் திறக்கும் போது..காதலி மரியா கோடாமாவின் மென்கரங்கள் தவிர..எல்லாமே கற்பனையின் சாத்தியங்கள்தானோ என்று உதடுகள் முணுமுணுக்க அநிச்சயத்துடன் கைத்தடியை அந்தரத்தில் அசைத்தவாறே வீதியில் நடந்துபோகும் போர்ஹேயை..ஒருமுறையாவது..ஒரு முறையாவது..பார்த்திருக்கிறீர்களா? ஹிட்ச்காக்

மதிப்பிற்குரிய ஹிட்ச்காக் அவர்களே

ரியர் விண்டோ சினிமாவில், கால்முறிந்ததன் காரணமாக, வீட்டிலேயே ஓய்வெடுக்க நேரும் புகைப்படக்காரன் ஜெஃப், தன் நேரத்தைக் கழிக்க  அண்டை வீடுகளை, தன் வீட்டு ஜன்னல்வழி வேடிக்கை பார்க்கத் தொடங்குகிறான். தன்னை ஒரு ஜோடிக்கண்கள் பின்தொடர்வதை அறியாத ஒரு மாடிவாசி- அவள் பெயர் செல்வி.டார்சோ- நடனபாவத்தில் தன் பிராவை உற்சாகமாகக் கழற்றி எறிகிறாள். ஜெஃப்பின் ஜூம்லென்ஸ் மேலே செல்கிறது. செல்வி. டார்சோவின் வீட்டின் கூரையில் புறாக்கள் மேய்கின்றன. செல்வி. டார்சோவின் நடனம் நிற்காமல் தொடர்கிறதா ஹிட்ச்காக்? அவள் வீட்டுக்கூரையில் மேய்ந்த புறாக்கள் இப்போது எங்கே மேய்கின்றன? ஹிட்ச்காக்!

நான் அனுமன்

ஷங்கர்ராமசுப்ரமணியன் இந்த உலகம் முழுமையும் உங்களிடமே இருக்கட்டும் அதன் ஓரத்தில் எனக்கு விளையாட சிறு மைதானம் உண்டு சேகரிக்க சில கூழாங்கற்களும் சிறகுகளும் உண்டு ஓயாமல் என்னை விளையாடும் ஒரு பந்தும் உண்டு 000 லட்சம் ஜோடிக் கால்கள் உள்ளே துடிக்கும் பந்தில் இருக்கிறது விளையாட்டு என்னிடம் அல்ல