ஷங்கர்ராமசுப்ரமணியன் காதலின் அளவற்ற ஆற்றலையும் அதன் வசீகர ஈர்ப்பையும் சொல்லும் மகத்தான நவீன செவ்வியல் படைப்பு , காப்ரியேல் கார்ஸியா மார்க்வெஸின் ‘ லவ் இன் தி டைம் ஆஃப் காலரா ’. அவர் ஒரு பியானோ இசைஞனாக அளவற்ற காதலை நறுமண இசையாகப் பரப்பிய பிரத்யேகப் படைப்புதான் இந்நாவல் . கவித்துவத்தின் இசைமையும் எந்தக் கலாச்சாரத்தவரும் உணரும் அன்றாடத் தருணங்களின் மீதான கூர்மையான அவதானிப்பும் கொண்டது . காதல் என்ற உணர்வுநிலை தரும் நோய்த்தன்மை , ஆறாத ரண உணர்வு ஆகியவற்றோடு அதன் வீண்தன்மையையும் ஆழமாகப் பேசுவது . காதலில் இருக்கும் , காதல்கொள்ளப்போகும் ஆண் , பெண் இருவரும் சேர்ந்து படிக்க வேண்டியது . இந்த நாவலின் தொடக்கமே இப்படி இருக்கிறது . ‘ அது தவிர்க்க முடியாதது : கசந்த வாதுமைகளின் வீச்சம் எப்போதும் நிறைவேறாத காதலுக்கு நேரும் விதியைத்தான் அவனுக்கு ஞாபகப்படுத்தும் .’ பிராயத்தில் பித்துப் பிடித்ததைப் போலத் தொடங்குகிறது நாயகன் ப்ளோரென்டினா அரிஸாவின் காதல் . நாயகி பெர்மினா டாசா அவளது தந்தையால் வேறு ஊருக்கு அழைத்...