சமையலறைக் கத்திதான்
அதை எடுத்துப் பிடித்தால்
மத்தியகால
சண்டை சாகசங்களுக்கு
அழைப்பு விடுக்கிறது.
கை
வேட்டைக்குப்
பரபரக்கிறது
போதும்
காந்தி பிறந்தார்
போனார்
மீண்டும் வந்துவிட்டார்
சொல்கிறார்கள்
இனி
எலுமிச்சம் பழத்தை
நறுக்கினால் போதும்
நீ.
Comments