முத்திரை
பேருந்துக்கு
காத்திருப்பவள்
நடனபாவத்துடன்
முந்திக்குள்
விரல்விட்டு
சேலை மடிப்புகளை
நீ..............வி விடுகிறாள்
ஒரு கணம் அனைத்தும்
திகைத்து நகர்ந்தன
மேலிருந்துதான்
பார்த்திருக்க வேண்டும்
கடவுள்
சபாஷ்
சபாஷ்
சபாஷ்
என்றார்.
0000
ரயில்கள்
எத்தனை யுகங்கள்
எவ்வளவு கடவுள்கள்
தத்துவம் கருணை
சாப்பாடு
அன்பு
முத்தம்
வந்து வந்து
போகும்
ரயில்கள்
கண்ணீருடன்
பிச்சை பிச்சையென்று
தவழந்து ஏறி
இறைஞ்சி
திரும்புகிறேன்
என் பாத்திரம்
இதுவரை நிறையவே இல்லை.
(காலம் சிறப்பிதழில் வெளியானது)
புகைப்படம்: சிவா
புகைப்படம்: சிவா
Comments