ரியர் விண்டோ சினிமாவில், கால்முறிந்ததன்
காரணமாக, வீட்டிலேயே ஓய்வெடுக்க நேரும் புகைப்படக்காரன் ஜெஃப், தன் நேரத்தைக் கழிக்க அண்டை வீடுகளை, தன் வீட்டு ஜன்னல்வழி வேடிக்கை பார்க்கத் தொடங்குகிறான். தன்னை
ஒரு ஜோடிக்கண்கள் பின்தொடர்வதை அறியாத ஒரு மாடிவாசி- அவள் பெயர் செல்வி.டார்சோ- நடனபாவத்தில்
தன் பிராவை உற்சாகமாகக் கழற்றி எறிகிறாள். ஜெஃப்பின் ஜூம்லென்ஸ் மேலே செல்கிறது. செல்வி.
டார்சோவின் வீட்டின் கூரையில் புறாக்கள் மேய்கின்றன. செல்வி. டார்சோவின் நடனம் நிற்காமல் தொடர்கிறதா ஹிட்ச்காக்? அவள் வீட்டுக்கூரையில் மேய்ந்த புறாக்கள் இப்போது எங்கே மேய்கின்றன? ஹிட்ச்காக்!
Comments