ஹிட்ச்காக் அவர்களே, இன்னும்
பிறக்காத ஒரு குற்றத்துக்காக உங்கள் வீட்டு ஜன்னலை இரவில் திறக்கும் போது..காதலி
மரியா கோடாமாவின்
மென்கரங்கள் தவிர..எல்லாமே கற்பனையின்
சாத்தியங்கள்தானோ
என்று உதடுகள் முணுமுணுக்க அநிச்சயத்துடன்
கைத்தடியை அந்தரத்தில்
அசைத்தவாறே வீதியில்
நடந்துபோகும் போர்ஹேயை..ஒருமுறையாவது..ஒரு முறையாவது..பார்த்திருக்கிறீர்களா?
ஹிட்ச்காக்
Comments