நான் பணக்காரனுமல்ல
ஏழையுமல்ல
ஒரு அசந்தர்ப்பம்
என்றுதான் சொல்லமுடியும்.
என் அலுவலகப்பையின் ஜிப்
ஒருநாள்
வாய்பிளந்து விட்டது
அன்று நான் போன இடத்திலெல்லாம்
அந்தப் பை
என் போதாமைகளை எல்லாம்
இளித்துச் சொல்லி
கந்தல் சிறுவனைப் போல நாணவைத்தது
மூடிப் போர்த்தித்தான் நான் வீடுதிரும்பினேன்.
நான் அப்போதுதான் நினைத்துப் பார்த்தேன்
அவளது பை கிழிந்திருந்தால்
ஆகியிருக்கும் இரட்டைத் துயரம்.
வாய்பிளந்தது என் பை தானே.
Comments