மழை பெய்த தெருவில்
கூழாங்கற்கள்
தவளைகளாக மாறின.
வட்டமாய் அணிவகுத்து
துள்ளி தொடங்கின
தங்கள் இலக்கில்லாத முற்றுகையை
தவளைப் போர் வீரர்களே
தவளைப் போர் வீரர்களே
உங்கள் பிறப்பின் உற்சாகத் துள்ளலை
வீட்டுத்திண்ணையில் படுத்திருக்கும்
நாய் பார்த்துக் கொண்டிருக்கிறது
நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
000
Comments