வாணி ஊருக்குப் போயிருந்தாள்
வியாழக்கிழமை இரவன்று
தவறாமல்
சாய்பாபாவுக்கு
ஆப்பிளைப் படைக்கச் சொல்லியிருந்தாள்
நான் அந்த நாள் முழுவதும்
பாபாவையும்
வாணியையும்
ஆப்பிளையும்
நினைவில் வைத்திருந்தேன்
இரவில் வீடு திரும்பி
குளிர்சாதனப் பெட்டியைத் திறந்தேன்
ஆப்பிளை எடுத்து
பூஜையறையில்
சாய்பாபாவுக்கு
வைத்தேன்.
ஆப்பிள் வியர்ததது
தீபச்சுடர் ஒளியில்
பாபாவின் முகத்தைப் பார்த்தேன்
அவர் முகத்தில் வருத்தம்
எனக்கும்தான்.
Comments