என் தந்தையர்
எனக்கு வழிவிட்டுப் போயினர்.
என் வீடும் நிலமும்
விசாலம் கொண்டது
துளியும் கவலை இன்றி
பெயரோடு மகத்துவமும்
சூடிய மலர்கள்
காவியச்சாயல் ஏறாத
புறக்கணிக்கப்பட்ட பூக்கள்
மஞ்சளும் சிகப்புமாக
குப்பைமேடுகள்
சிதில வீடுகள், பாலங்களில்
பூத்துச் சிரிக்கின்றன.
என் குழந்தைகள்
அந்தப் பூக்களைப் போல
இந்த உலகை
துல்லியமாக
விடுதலையுடன் பார்க்க
நான்
அதே சிரிப்புடன்
இங்கிருந்து நீங்கத்தான் வேண்டும்.
Comments