ஜோர்ஜ் லூயி போர்ஹே
இரவில் நட்சத்திரம் இருக்காது,
இரவும் இனிமேல் இருக்காது
நான் இறப்பேன்
என்னுடன் தாங்க இயலாத
என்னுடன் தாங்க இயலாத
பிரபஞ்சம் மொத்தமும்.
நான் ப்ரமிடுகள், பதக்கங்கள்
கண்டங்கள் மற்றும் முகங்களை
துடைத்தழிப்பேன்.
இறந்தகாலத்தின் வண்டலை இல்லாமல் செய்வேன்
வரலாற்றை
புழுதியாய் புழுதியிலும் புழுதியாய் ஆக்குவேன்
நான் இறுதி சூரிய அஸ்தமனத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
கடைசிப் பறவைக்கு காதுகொடுக்கிறேன்
யாருக்கும் நான் இல்லை.
Comments