ஜோர்ஜ் லூயி போர்ஹே
(மொழிபெயர்ப்பு: அசதா, மணல் புத்தகம்-2)
என் புத்தகங்கள் (என் இருப்பை அவை அறியாது)
காதோர நரைகளும் சாம்பல் பூத்த கண்களும் கொண்ட
இந்த என் முகத்தைப் போல
என்னிலொரு பகுதி.
நம்பிக்கையற்று க்ளாசுக்குள் பார்க்கிறேன்
உள்ளீடற்ற என் கையை வழியவிடுகிறேன்
நான் நினைக்கிறேன், தர்க்கத்தின் கசப்பு குறையாது
என்னை யாரென அறியாத பக்கங்களில் இருக்கின்றன
நான் எழுதியவற்றில் அல்ல
அவ்வகையில் அது நல்லது
இறந்தவர்களின் குரல்கள் எப்போதும்
எனக்குச் சொல்லும்
Comments