உன் இடைவிளிம்பில்
பேண்டிசிலிருந்து நழுவும்
நீல,சிகப்புப் பூக்கள்
இந்த மாலைச் சூரிய வெளிச்சம்
தரும்
அகாரண சந்தோஷம்
அதில் ஒளிரும் உன் தேகம்
நிச்சயமின்மையின் சமுத்திரத்தில்
மிதக்கும்
என் ரோஜாவே
மூன்று சாலைகள் பிரியும்
இப்பாலத்தின் முனையில்
சிதறிக் கிடப்பதையெல்லாம்
என் காதல்
என்று/
என்றா
தொகுப்பேன்.
(அச்சம் என்றும் மரணம் என்று இரண்டு நாய்குட்டிகள் தொகுப்பிலிருந்து(2008)
Comments