இப்போது,
இந்த வார்த்தைகளை நான் எழுதும்போது, என்
அம்மாவின் கண்கள் என்மீது நிலைத்திருக்கின்றன. அந்தக் கண்கள், மனம்நிறை கவனத்துடனும் கனிவுடனும் என்னைக் கேட்காமல் கேட்கின்றன. “எனது செல்லமே, உன்னை
எது தொந்தரவு செய்கிறது…?”
ஒரு புன்னகையுடன் நான் பதிலளிக்கிறேன். “ஒன்றும் இல்லை...நல்லபடியாகவே சென்றுகொண்டிருக்கிறது, அம்மா”.
“ஆனாலும், என்ன விஷயமென்று சொல்லேன்” என்று
அம்மா கேட்கிறாள். நான் என் தலையை
திருப்பி, ஜன்னல்வழியாகப் பார்க்கத் தொடங்குகிறேன்.
அம்மாவின்
கண்களால் எல்லாவற்றையும் பார்க்க முடிகிறது பிறப்பைப் பார்க்க முடிகிறது வாழ்க்கை முழுக்கவும் ‘மறு உலகத்திலிருந்து’ சாவுக்குப் பிறகும் அவள் எல்லாவற்றையும் பார்க்க
முடிகிறது. அவளது மகனை அவர்கள் ஒரு
கொலை எந்திரமாகவோ அல்லது ஒரு விலங்காகவோ மாற்றிவிட்டாலும்,
ஒரு கொலைகாரனுடைய தாயின் கண்கள் அவனை நேசத்தோடுதான் பார்த்துக்
கொண்டிருக்கிறது…பார்த்துக்
கொண்டிருக்கிறது.
எப்போது
ஒரு அம்மா தனது கண்களை எடுக்கிறாளோ,
அவளது குழந்தை திரியத் தொடங்குகிறது, நேசமும் இதமும் இல்லாத உலகத்துக்குள் தொலைந்துபோகிறது.
நாளை
அன்னையர் தினம். நான் குழந்தையாக இருந்தபோது
இப்படியான தினம் இருந்ததாவென்று தெரியவில்லை. நான் குழந்தையாக இருந்தபோது
ஒவ்வொரு நாளும் அன்னையர் தினம். ஒவ்வொரு காலையும் அன்னையர் தினம். மதியமும் மாலையும் இரவும்.
எனது
முதிய வயதிலேயே இதை உன்னிடம் சொல்லமுடிகிறது,
ஏனென்று தெரியுமா அம்மா? நான் உன்னைவிட வயதான
பின்னரே உன்னிடம் இதைச் சொல்லமுடிகிறது…ஏன்
தெரியுமா? நீ உயிருடன் இருந்தபோது
எனக்கு உன்னிடம் சொல்வதற்குத் தைரியமே இல்லை. நான் ஒரு கவிஞன்.
அந்த வார்த்தை என்னை அச்சுறுத்தியது, நான் அதை அப்பாவிடம்
சொன்னதேயில்லை…அப்படியொன்றை
சொல்வது நாகரிகமானது என்று நான் கருதவேயில்லை.
வெளிச்சத்துக்குள்
நுழைந்ததைப் போல நான் கவிதை
உலகத்துக்குள் நுழைந்தேன் அத்துடன் தற்போது நான் வெளியேறத் தயாராகிக்
கொண்டிருக்கிறேன்…இருட்டுக்குள்….கவிதையின்
நிலவெளியினூடாக நான் ஏறிக்கடந்தேன்…ஒரு மீனின் கண்ணோடு,
ஒரு குழி எலியின் கண்ணோடு,
ஒரு பறவையின் கண்ணோடு, ஒரு குழந்தையின் கண்ணோடு,
ஒரு வளர்ந்த மனிதனின் கண்ணோடு மற்றும் ஒரு வயோதிகனின் கண்ணோடு.
‘நான்’ ஒரு
கவிஞன் என்ற வார்த்தைகளைச் சொல்வதற்கு
ஏன் இத்தனை கடினமாக உள்ளது, இதற்கு இணையான சொற்களை நீ தேடி வெளியே
வருவதற்கு முயல்கிறாய் நீ. அம்மாவிடம் எப்படிச்
சொல்வது. அம்மாவால் அதை அறியமுடியும்தான். ஆனால் அதைப்போன்ற
ஒன்றை எனது தந்தையிடம் சொல்வது
யோசித்தே பார்க்கமுடியாதது…அதனால்
நான் என் தந்தையிடம் சொல்லவே
மாட்டேன். “அப்பா…நான் ஒரு கவிஞன்”. அதை
அவர் தெரிந்துகொண்டிருப்பாரா என்றுகூட எனக்குத் தெரியாது…அவர் மிகவும் தொலைவிலிருப்பவர்.
தினசரியைப் படித்துக் கொண்டோ, சாப்பிட்டுக் கொண்டோ, ஷூக்களை பாலீஷ் செய்துகொண்டோ இருக்கும்போது, “என்ன சொல்ல வருகிறாய்
நீ?” என்று கேட்டிருக்கலாம். அது மிகவும் அல்பம்
என்பதால் திரும்பக் கேட்டிருந்தால் நான் அதைத் திரும்பிச்
சொல்லியிருக்க முடியாது. நான் உரக்கச் சொல்லியிருக்கலாம்.
“அப்பா, நான் ஒரு கவிஞன்”
அப்பா
தனது தட்டிலிருந்து, தினசரித் தாளிலிருந்து நிமிர்ந்து பார்த்திருப்பார். ஆச்சரியத்துடனோ அல்லது என்னைப் பார்க்காமலோ தலையை ஆட்டியபடி அருமை அருமை என்று சொல்லியிருக்கலாம். அல்லது எதுவுமே சொல்லாமல் இருந்திருக்கலாம்.
நான்
தந்தை என்ற தலைப்பில் 1954-ல்
ஒரு கவிதையை எழுதினேன். என் இதயத்தை அறியும்போது/
எனது வயதான தந்தையே…” அந்தக் கவிதையை என் தந்தை படித்தாரா
என்று எனக்குத் தெரியாது…அதை நான் அவருக்குப்
படித்துக்காட்டவும் இல்லை….தற்போது 1999-ம் ஆண்டு…”அம்மா, அப்பா, நான் ஒரு கவிஞன்” எனது
பெற்றோர்கள் என் வார்த்தைகளைக் கேட
இயலாதவாறு எனது குரல் மெலிதாகிவிட்டது.
“செல்லமே,
நான் அறிவேன்” அம்மா சொல்கிறாள் “நான் எப்போதும் அறிவேன்.”
அம்மா சொல்கிறாள்.
“என்ன
சொன்னாய். என்னால் கேட்க இயலவில்லை” என் தந்தை சொல்கிறார்.
Comments