Skip to main content

ஏன் குழந்தைகள் அழுகின்றன?

ஷங்கர்ராமசுப்ரமணியன்

குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்கின்றன
அதனால் அழுகின்றன
அதைத் தெரிந்துகொண்டே அவை அழுகின்றன
வாயில் வைத்திருக்கும் பிளாஸ்டிக் பொம்மையை
பிடுங்கினால் அழுகின்றன
பெயர் வைக்கும்போது
அழுகின்றன
முதல் கேக்கை வெட்டி எல்லாரும்
ஹேப்பி பர்த்டே பாடும்போது அழுகின்றன
மொபைல் கருவியைச் சப்பக்கொடுக்காமல்
பிடுங்கினால்
அழுகின்றன
பலூன்கள் உடைந்துபோனால்
அழுகின்றன
 உறங்கும்போது முத்தம் கொடுத்தால்
அழுகின்றன
எழுந்து நிற்கும்போது சிரமம் ஏற்பட்டு
அழுகின்றன
காலுறைக்குள் கையைச் சிக்கவிட்டு
முக்காலிக்குள் மாட்டிக்கொண்டு அழுகின்றன
விஷவாயுத் தாக்குதலில் அழாமலேயே கண்விழித்தபடியும்
இறந்து போகின்றன
போர்களில்
என்ன நடக்கின்றதென்றே தெரியாமல்
இந்தக் குழந்தைகள் நம்மைக் கைவிட்டுவிடுகின்றன
இவர்கள்
இவர்கள்தான்
நொடியை விடச் சிறுகணத்தில்
அநாதைகள் ஆவதற்கு
அழதபடி காத்திருக்கிறார்கள்
குழந்தைகள் அழுவது அவர்கள் நுரையீரலுக்கு
நல்லது
நானும் என் ஆரோக்கியத்திற்காக
அழுகிறேன்

( நன்றி : http://thechive.com/2013/07/24/the-reasons-why-kids-cry-32-photos/)

Comments

Popular posts from this blog

எரிந்துபோன பாரிஸின் இதயம்

ஈபிள் கோபுரத்துக்கு முன்னரே நூற்றாண்டுகளாக பாரிஸின் சின்னமாக இருந்த நோத்ர தாம் தேவாலயம் கடந்த திங்களன்று எரிந்துபோனது. நோத்ர தாம் என்றால் புனித அன்னை என்று அர்த்தம். உலகமெங்கும் வாழும் கத்தோலிக்கர்களுக்கான புனிதத் தலங்களில் ஒன்றாக விளங்கும் இந்தத் தேவாலயம் வரலாற்றுரீதியாகவும் பண்பாட்டு அளவிலும் கட்டிடக் கலை சார்ந்தும் முக்கியத்துவம் வாய்ந்தது. “நோத்ர தாம் தேவாலயம் பிரெஞ்சு மக்கள் எல்லாருக்குமுரியது; இதுவரை அங்கே போயிராதவர்களுக்கும்” என்று கூறியிருக்கிறார் அந்நாட்டின் அதிபர் இமானுவேல் மெக்ரான்.
ஆறாம் ஹென்றி முடிசூடிய, நெப்போலியன் பேரரசனாகப் பதவியேற்ற இடம் இது. 1163-ம் ஆண்டிலிருந்து 1345 வரை கட்டி முடிப்பதற்கு ஒன்றரை நூற்றாண்டை எடுத்துக்கொண்ட தேவாலயம் இது.
விக்டர் ஹ்யூகோவின் நோத்ர தாம்

சிமெண்ட் நிறக் காரில் வருபவர்கள்

அந்த மழைக்கால ஓடை இப்போது
நீர் வற்றியிருக்கிறது
சென்ற வருட மழைக்குப் பின்
தினம்தோறும் காலையில்
நான்கு யுவதில் அங்கே
படகு செலுத்த வருவார்கள்
பேருந்தில் பாலம் கடக்கும்
என்னை அவர்களுக்குத் தெரியாது
அவர்கள் சிமெண்ட் நிறக் காரில்
வருவார்கள்
அந்தக் கார்
மரத்தடி நிழலில்
இளைப்பாறும் காட்சி அலாதியானது
மழைக்கால ஓடையில் நீர்குறைய
அவர்கள் அங்கே வருவதில்லை
படகு தனியே நின்று கொண்டிருக்கிறது
கோடை முடிவடையும் அறிகுறிகள்
ஆரம்பமாகிவிட்டன
இன்னும் சில தினங்களில் மழைபெய்யக் கூடும்
அவர்கள்
சூரியன் வரும்போதே
குதிரைவால் சடையுடன்
ஓடைக்குப் படகு செலுத்த வந்துவிடுவர்
படகு இப்போது தனியே
நின்று கொண்டிருக்கிறது.

அனுபவம் அனுபவிப்பது அனுபவிப்பவர்

ஜே. கிருஷ்ணமூர்த்தி அந்தப்பள்ளத்தாக்குநிழலில்இருந்தது; அஸ்தமிக்கும்சூரியனின்ஒளிரேகைகள்தூரத்துமலைகளின்உச்சியைத்தீண்டின; மலைகளைப்பூசியிருக்கும்சாயங்காலத்தின்மினுமினுப்புஅவற்றின்உள்ளிருந்துவருவதுபோலத்தோற்றம்தருகிறது. நீண்டசாலையின்வடக்கில், மலைகள்தீக்குள்ளாகிமொட்டைத்தரிசாய்க்காட்சிதருகின்றன; தெற்கிலிருக்கும்மலைகளோபசுமையாகவும்புதர்கள், மரங்கள்அடர்ந்தும்உள்ளன.  நெடிதாகப்போகும்சாலை, பிரமாண்டமும்எழிலும்கொண்டஇந்தப்பள்ளத்தாக்கைஇரண்டாகப்பிரிக்கிறது. குறிப்பாக, இந்தமாலையில்மலைகள்மிகவும்நெருக்கமாக, மாயத்தன்மையுடன், இலேசாகவும்மிருதுத்தன்மையுடனும்தெரிகின்றன். பெரியபறவைகள்உயரசொர்க்கங்களில்சாவதானமாகச்சுற்றிக்கொண்டிருக்கின்றன. தரையில்அணில்கள்மந்தமாகசாலையைக்கடக்கின்றன. அத்துடன்எங்கோதூரத்தில்விமானத்தின்ரீங்காரம்கேட்கிறது