ஷங்கர்ராமசுப்ரமணியன்
கைவிடப்பட்ட
வில்வண்டி
ஒன்று
என்
சமீபத்திய நினைவுகளில்
காட்சியாக
வருகிறது
அது
சாய்ந்திருக்கும்
கிழட்டுப்
புளியமரமோ
கால்களை
விரித்த எலும்புக்கூடாய்
தன்
வேர்களை வெளிக்காட்டி நிற்கிறது
ஏதேதோ
காரணங்கள் இருந்திருக்கலாம்
அது
பயணிக்காமல் நின்றதற்கு.
ஆரச்சக்கரங்களின்
பெரும்பாதி
மணலுக்குள்
புதைந்து விட்டது
அவை
மூடிய நிலத்தின் மீது
புற்கள்
தாவரங்கள்
முளைத்து
விட்டன.
பருவமழையால்
வண்டியின் மேல்பகுதி
பச்சைப்பசேலென
பாசிபடர்ந்து மின்னுகிறது
வண்டிக்குக்
கீழே
உலர்ந்த
சேறுபடிந்து
தரையில்
பதிந்துள்ளது
ஒரு
அரிக்கேன் விளக்கு.
தெரியாமையின்
இருள்மூடிய
இரவுகளில்
அந்த
விளக்கு
ஆடியபடி
உரைத்த மர்மங்களை
கழற்ற
இயலாமல் போனானோ
வண்டிக்காரன்.
Comments