ஷங்கர்ராமசுப்ரமணியன்
அவன்
ஏரியை நோக்கி
வெளியே அந்தரத்தில்
கால்களை சேர்த்து
தொங்கவிட்டிருந்தான்
அவள்
அவனது
தோளில்
சாய்ந்திருந்தாள்
ஒரு உடைந்த பாலத்தின்
கல்நுனிதான்
ஆனால்
பெரியதொரு
மஞ்சள் சிகப்பு
பூக்களாக
அவர்கள் அங்கே
ஒரு ஊஞ்சலில்
ஆடிக்கொண்டிருந்தனர்
அவர்களின் அந்த
சாய்மானம் போதும்
அந்த மெல்லிய
கோட்டுச்சித்திரம் போதும்
சீக்கிரத்தில் மறைய
இருக்கும் அந்த சாயங்காலம் போதும்
அவர்கள்
அமர்ந்திருக்கும்
உடைந்த பாலத்தின் சிறுநுனி
போதும்.
Comments