ஸ்டீபன் வோலின்ஸ்கியின் நண்பர் கார்ல் ராபின்சன்
நிசர்கதத்த மகராஜிடம் போய்க் கேட்டார்.
"நான் அமெரிக்காவுக்குத் திரும்பிவிடவா
அல்லது இந்தியாவிலேயே இருக்கவா?"
நிசர்கதத்த மகராஜ் பதிலளித்தார்.
இந்தியாவில் இருக்கலாம்
அல்லது
அமெரிக்காவுக்கே திரும்பிப் போகலாம்
நீ இல்லை
அதனால் லாபமும் இல்லை
ஒரு நஷ்டமும் கிடையாது.
(நிசர்கதத்த மகராஜ், சென்ற நூற்றாண்டில் புனே நகரத்தில் வாழ்ந்த அத்வைத வேதாந்தி, புகையிலை வியாபாரி)
Comments