ஓநாய்
சில தருணங்களில்
ஓநாயாக இருப்பதில்லை
சில தருணங்களென்று குறுக்க வேண்டாம்
பெரும்பாலான தருணங்களில்
தாம் ஓநாய்களே அல்ல என்று அவை சொல்லக்கூடும்.
நமக்கிருப்பதைப் போல
கோட் ஸ்டாண்ட் இருந்தால்
ஓநாயை வெளிப்படையாகக் களைந்து
தொங்க விட்டு
இளைப்பாறக் கூடலாம் அவை.
அந்த கோட் ஸ்டாண்டின் இன்னொரு காம்பில்
முயலும் முயலைக் கழற்றித் தொங்கவிட்டிருக்கும்.
Comments