Skip to main content

தாவர மகளே



சிப்பி விரிவது போல்
என் முத்தத்துக்கு
உன் இதழ்களைப் பகிர்கிறாய்
உன் குழந்தைமை
உன் பிராயம்
இரண்டுமே ருசிக்கின்றது
உன் வாய் நீர்
பருகும் போழ்து
பருவம் உடலில்
மின்னத் தொடங்கியிருக்கும்
தாவர மகளே
உனக்கென் காமம் சமர்ப்பணம்

Comments