Skip to main content

Posts

Showing posts from February, 2026

இளையராஜாவிடமிருந்து தப்பிப்பது எப்படி? – ஒரு கையேடு

இளையராஜாவிடமிருந்து வெளியேறுவது டாஸ்மாக்கிலிருந்து சீக்கிரம் கிளம்புவது சரியான வேளையில் குவளையைக் கவிழ்ப்பது. இளையராஜாவிடமிருந்து வெளியேறுவது லட்சியங்களிலிருந்தும் மாய்மாலங்களிலிருந்தும் உருக்கம் மற்றும் நப்பாசையிலிருந்தும் தப்பிப்பது. இளையராஜாவிடமிருந்து வெளியேறுவது பக்தி ஏக்கம் சரணாகதி யாசகத்தை எல்லா நிலைகளிலும் மறுப்பது. இளையராஜாவிடமிருந்து வெளியேறுவது நவீன மடங்களிலிருந்தும் சதா நம்மை துன்புறுத்தும் ஏக்கங்களிருந்தும் துண்டித்துக்கொள்வது. இளையராஜாவிடமிருந்து வெளியேறுவது காலை மாலை இரவு கிழமைகளை குழப்பிக்கொள்ளாமல் இருப்பது. அம்மா அப்பா அப்பப்ப்பா அம்மம்மாக்களின் நினைவேக்கத்திலிருந்து நகர்வது. இளையராஜாவிடமிருந்து வெளியேறுவது அந்தி தரும் அர்த்தமில்லாத துக்கத்தைப் போக்க ஒரு காஃபி போதுமென்று அறிவது. இளையராஜாவிலிருந்து வெளியேறுவது ரம்பத்தை நக்கிக்கொண்டே ரத்தத்தையும் சுவைத்துக்கொண்டிருக்கும் நாயின் அவலத்திலிருந்து சற்றாவது பரிணமிப்பது. இளையராஜாவிடமிருந்து வெளியேறுவது தழும்புகளை தற்புகைப்படங்களாக்கி உலவ விடாமலிருப்பது நேசப்பெயர்களை பச்சைக்குத்திக் கொள்ளாமல் சிகரெட்டால் முழங்கைகளைச் சுட்டுப் ப...